ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு – ஒருவர் பலி

_germany_attack_512x288_bbc_nocredit_CIஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார் புலன்விசாரணை செய்கிறார்கள்.

இன்று காலை 5 மணியளவில் கிரஃபிங் ரயில் நிலையத்தில் வைத்து 4 பயணிகளை அந்த 27 வயதான நபர் தாக்கியுள்ளார், காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.

தாக்குதலாளியை போலிஸார் மடக்கிப் பிடித்ததாக தெரியவருகின்றது. அவர் அல்லாஹ் அக்பர் என்று கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலாளியின் நோக்கம் தெரியவில்லை.

இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை தாம் புறந்தள்ளவில்லை என்று போலிஸ் தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார்
BBC

Copyright © 3203 Mukadu · All rights reserved · designed by Speed IT net