வட கொரிய ஆளுங் கட்சியின் 4 நாள் கூட்டம் பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில் செவ்வாய்க்கிழமை இரவு அந்நாட்டின் தலைநகரிலுள்ள கிம் இல் – சங் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடினர்.
அந்நாட்டின் தலைவர் கிம் யொங் – உன் கூடியிருந்த கூட்டத்தின் முன்பாகத் தோன்றி கையை அசைக்கவும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதன்போது ‘கொரிய தொழிலாளர் கட்சியின் 7 ஆவது கூட் டம் நீடூழி வாழ்க’ என பொருள் படும் வாசகத்தைக் கொண்ட இராட்சத கொடி காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் அந்நாட்டில் 1980 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் தடவையாக இடம்பெற்ற மேற்படி ஆளுங் கட்சிக் கூட்ட பூர்த்திக் கொண்டாட்டங்களின் அங்கமாக நடன நிகழ்வுக ளும் களியாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அந்தக் கட்சியின் 3,400 க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கிம் யொங் – உன்னினது அணுசக்தி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளித்து வாக்களித் துள்ளனர். அத்துடன் அந்தக் கட்சியின் தலைவர் என்ற பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிம் யொங் – உன் இதுவரை காலமும் முதலாவது செயலாளர் என்ற பதவி நிலை யிலேயே கொரிய தொழிலாளர் கட்சிக்கு தலைமை தாங்கி வந்திருந்தார்.