இங்கிலாந்து கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு.

மான்செஸ்டர் : இங்கிலாந்து மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் மைதானத்தில் இன்று மென்’ஸ் யூனைட்டட் , போர்ன்மவுத் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடக்க இருந்தது. இப்போட்டிக்கு முன் நடந்த சோதனையி்ன் போது மைதானத்தில் மர்மான முறையில் இருந்த பார்சல் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் சந்தேகப்பட்டு சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணர்கள் இந்த பையில் வெடிகுண்டு இருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து போட்டிக்கு தடை விதிக்கபபட்டது. மேலும் மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டை வைத்தது யார், மர்மமான பார்சல் எப்படி வந்தது, இது தீவிரவாதிகளின் சதி செயல் திட்டமா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
தினமலர்

Copyright © 9964 Mukadu · All rights reserved · designed by Speed IT net