இத்தாலியில் சீன பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர். இது ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்புக்கான நடவடிக்கை அல்ல.
உண்மையாகவே இத்தாலியின் ரோம் மற்றும் மிலான் நகர வீதிகளில் தற்போது சீன பொலிஸார் நால்வர் பணியாற்றுகின்றனர்.
இத்தாலிக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உணர்வத ற்காக பரீட்சார்த்த நடவடிக்கையாக இத் திட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது என இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
சீன மக்கள் தமது நாட்டு பொலிஸாரை இலகுவாக இனங்காண் பதற்காக சீனாவில் தாம் அணியும் சீருடைகளையே இத்தாலியிலும் சீன பொலிஸார் அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு வார காலத்துக்கு இப் பரீட்சார்த்த திட்டம் அமுல்படுத்தப்படும் என இத்தாலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்படி பொலிஸார் நால்வருக்கும் இத்தாலிய பொலிஸாரால் மேலதிகப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் இவ்வாறு சீன பொலிஸார் பணியாற்றுவது இதுவே முதல் தடவை என இத்தாலிக்கான சீன தூதுவர் லீ ருயு தெரிவித் துள்ளார்.
இத்தாலிக்கு வருடாந்தம் 30 இலட்சம் சீன உல்லாசப் பயணிகள் செல்கின்றனர் என சீனாவின் சர்வதேச ஒத்துழைப்புப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் லியாவோ ஜின்ரோங் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய வீதிகளில் சீனப் பொலிஸார் ரோந்துப் பணியாற்ற நியமி க்கப்பட்டமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய உள்துறை அமைச்சர் ஏஞ்சலினோ அல்போன்சோ இது தொடர்பாகக் கூறுகையில், “இத் திட்டம் சீன உல்லாசப் பயணிகளைக் மனதிற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இது வெற்றியளித்தால் ஏனைய வகையான ஒத்துழைப்புகளும் கருத் திற்கொள்ளப்படலாம்.