ஆப்கானிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா அக்தார் மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க விமானப்படையினர் நடத்திய தாக்குதல்களில் மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மன்சூர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனை பென்டன் உறுதி செய்துள்ளது எனினும் சம்பவம் குறித்து தொடர்ந்தும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய சனிக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் தமிழ்