பரிஸ் செய்ண்ட் ஜெர்மைனிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் இப்ராஹிமோவிக்

article_1463918630-ParisZaltanIbrahiமர்சேய் அணியைத் தோற்கடித்து கூப்பே டீ பிரான்ஸ் கிண்ணத்தை பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி கைப்பற்ற, பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணிக்கான தனது இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்று வெற்றியுடன் ஸல்டான் இப்ராஹிமோவிக் விடைபெற்றார். மேற்படி கிண்ணத்தினை வென்றமையையடுத்து தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக உள்ளூர் கிண்ணங்கள் அனைத்தையும் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வென்றுள்ளது.

மேற்படி போட்டியில் 4-2 என்ற கோல்கணக்கில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி சார்பாக இப்ராஹிமோவிக் 2 கோல்களையும் எடின்சன் கவானி, பிளைஸி மத்தியூடி ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றிருந்தனர். இதில் எடின்சன் கவானி அடித்த கோலுக்கான பந்து பரிமாற்றத்தையும் இப்ராஹிமோவிக்கே மேற்கொண்டிருந்தார்.

நான்கு வருடங்களுக்கு பிறகு பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணியிலிருந்து விலகுகின்ற இப்ராஹிமோவிக், அவ்வணிக்காக 180 போட்டிகளில் பங்குபற்றி 156 கோல்களைப் பெற்றுள்ளார். இதுவே அவ்வணிக்காக வீரரொருவர் பெற்ற அதிக கோல்களாகும்.

Copyright © 2713 Mukadu · All rights reserved · designed by Speed IT net