விழுந்த இடத்திலிருந்து துண்டுதுண்டுகளாக சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு.!

Flight missing_CIஎகிப்­து­எயார் எம்.எஸ்.804 விமானம் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்த இடத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட மனித எச்­சங்கள் அந்த விமா­னத்தில் பாரிய வெடிப்பு இடம்­பெற்­றுள்­ள­மையை எடுத்­துக்­காட்­டு­வ­தா­க­வுள்­ள­தாக எகிப்­திய தட­ய­வியல் அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­யொ­ரு­வரை மேற்கோள் காட்டி ஏ.பி. ஊடகம் செவ்­வாய்க்­கி­ழமை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அந்த விமானம் கடந்த 19 ஆம் திகதி 66 பேருடன் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்­த­தை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கையின் போது இது­வரை ஒரு கரம் அல்­லது ஒரு கால் என்ற ரீதியில் சுமார் 80 உடல் பாகங்கள் துண்­டு­ துண்டுகள­ாக சித­றிய நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இதன்­போது முழு­மை­யாக எந்த உடலும் மீட்­கப்­ப­டாத நிலையில் அவ்­வாறு உடல்கள் சித­றி­ய­மைக்கு விமா­னத்தில் இடம்­பெற்ற பாரிய வெடிப்பே கார­ண­மாக இருக்­கலாம் என நம்­பப்­ப­டு­வ­தாக அந்த அதி­காரி தெரி­வித்­துள்ளார்.

எனினும் மேற்­படி தக­வ­லுக்கு அந்­நாட்டு நீதி அமைச்சின் தட­ய­வியல் திணைக்­களத் தலைவர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி தகவல் வெளி­யா­வ­தற்கு முதல் நாள் எகிப்­திய அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் வானில் பறக்கும் விமா­னங்­களின் இடத்தைக் கண்­ட­றியும் வேவையை வழங்கும் ஸ்தாப­னத்தின் தலைவர், அந்த விமானம் ஏற்­க­னவே கிரேக்க பாது­காப்பு அமைச்­சரால் தெரி­விக்­கப்­பட்­டது போன்று திரும்­ப­ல­டை­யவோ அல்­லது சடு­தி­யாக செங்­குத்­தாக விழவோ இல்லை என தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் அந்த விமா­னத்தில் பய­ணித்­த­வர்­களின் உடல் பாகங்­களை அடை­யாளம் காண மர­பணு பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக க கூறப்படுகிறது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net