அமெரிக்கா அணுகுண்டு வீசிய நகருக்கு சென்று அஞ்சலி செலுத்திய ஒபாமா

அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
160527091243_obama_ap_512x288_ap_nocredit
இந்நிலையில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமாவுக்கு முதல்முறையாக செல்லும் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா கருதப்படுகின்றார்.

160526194615_obama_abe_640x360_ap_nocredit

முகத்தில் கவலையுடன் குறித்த இடத்திற்கு வந்த ஒபாமா 1945 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க தாக்குதலின் நினைவுச் சின்னத்திற்கு வெள்ளை மலர்களால் செய்யப்பட்ட மலர்வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

குறித்த நினைவிடத்திற்கு அமெரிக்க ஜனாதிபதியுடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சென்றிருந்தார்.
160527071841_obama_japan_640x360_reuters_nocredit

இதன்போது கருத்துத் தெரிவித்த ஒபாமா, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியதன் மூலம் மனிதகுலம் தன்னையே அழித்துக்கொள்ளும் திறனை எடுத்துகாட்டியுள்ளது என தெரிவித்தார்.

இதேவேளை, இரண்டாம் உலகப்போரின் கடைசி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல் 1,40,000 பேர் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net