தமிழ் சமூக உருவாக்கம் .. இனக்குழும எச்சங்கள்,வேலைப்பிரிவினை,சாதியம்..வேலன்

நாம் வாழும் சமூகத்தினை விஞ்ஞான ரீதியாக ஆராய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும். விஞ்ஞான அறிவிற்கு உட்படுத்துகின்ற போது வரலாறுகளும் மீளவும் திரும்பி எழுதப்பட வேண்டியிருக்கும். இலங்கைத் தமிழ் மக்களின் வரலாறு போதுமானதாக எழுதப்படவில்லை என்ற கருத்து இருந்து வந்துள்ளது. அது இன்று பல்வேறு வழியில் முன்னேற்றம் கண்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வின் ஊடாக பெறப்பட்ட பண்டைய குடியிருப்புக்கள்இ நாணங்கள்இ சிலைகள் என்பவற்றின் துணைகொண்டு வரலாறு புதிதாக எழுதப்பட்டுக் கொண்டு வருகின்றது.
விஞ்ஞான அறிவியலைக் கொண்டு சமூகத்தில் விளைச்சலான சாதியத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. சாதியக் கருத்தியலை எவ்வாறு ஏன் உருவாக்கப்பட்டது என்பதை புதிய வெளிச்சத்துடன் விளக்கம் கொடுக்க முடிகின்றது.
13319916_1170604606304378_4949360806232820338_n
தமிழர் சரித்திரம் என்பதை மக்களின் வாழ்வியல் ஊடாக அணுகப்படவேண்டும். தமிழர் வரலாற்றில் சாதியத்திய அமைப்பும்இ அதுசார்ந்த பொருளாதாரம்இ சிந்தனைஇ வாழ்வியல் என்பது இருந்து வந்துள்ளது. சாதியத்தை மனிதகுல வளர்ச்சியின் போக்கின் நிகழ்வின் இருந்து இருந்து ஆராய்வதா இல்லை இன்னாள் வரை கற்பித்த கருத்தியலில் இருந்து ஆராய்வது என்பதில் சமூகச் சக்திகளிடத்தில் பெரும் மாறுபாடான அணுகுமுறைப் போக்கு உள்ளது. மனிதகுல வளர்ச்சி என்கின்ற போது காட்டுமிராண்டிச் சமூகத்தில் இருந்து பூர்வக்குடிவகையான இனக்குழுமம்இ தேசிய இனமாக வளர்ச்சி அடைகின்றது. அதாவது மனிதக் குரங்கிலிருந்து மனிதராக மாறி பொருள் உற்பத்திஇ பண்பாடு என்று தன்முயற்சியால் உருவாகிய மனித வரலாற்று தொடர்ச்சியாக உருவான சிந்தனை வடிவங்களை ஆராய்வதும் அவசியமாகும்.

சாதியோஇ மதமோ அல்லது ஆணாதிக்கச் சிந்தனை என்பன எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். சாதியம் அடிக்கட்டுமானம் என்றும் இல்லை இது மேற்கட்டுமானம் இல்லை என்றும் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. பொருளாதார அமைப்பிற்கு ஏற்ற சிந்தனை வடிவம் முழுமையாக அல்லது குறையாக சிதைந்து மாற்றமடைந்து கொண்டிருக்கும். பொருளாதார அமைப்பின் இருந்து உருவாகும் சமூகக் கட்டுமானத்தினை மறுக்கும் சிந்தனை தன்னியல்புக்கு இட்டுச் செல்கின்றதையும் கவனிக்கப்பட வேண்டும். இதனால் தன்னார்வ அமைப்புக்களினால் அடையாள அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.

சாதியம் அரசியல்இ பொருளாதாரஇ பண்பாட்டுத் தளத்தில் பல நூற்றாண்டுகாலம் இந்தியஇ இலங்கைச் சமூகத்தில் உள்ள புற்றுநோயாகும். சாதியச் சிந்தனை எவ்வாறு உருவாகியது என்பது பற்றியும் சாதியம் போதிக்கும் சிந்தனையின் தாக்கம் என்பது பற்றியும்இ இன்றைய காலத்தில் எவ்வாறு சாதியம் மாற்றம் பெற்றும் தொடற்;சியாக உயிர் வாழ்கின்றது என்பது பற்றி ஆராயப்படுகின்றது.

முன்னையக் காலத்தில் சாதிக்கொரு வேலையென்று ஒவ்வொரு சாதிகளும் ஒவ்வொரு வேலைப்பிரிவினுள் அடக்கப்பட்டனர். ஒவ்வொரு சாதியும் வேலைப்பிரிவிற்கு உட்பட்டு வேலைகளை நிறைவேற்றிக் கொண்டு வந்ததுடன்இ சமூக அமைப்பில் நிறுவனமயமாக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. இங்கு சாதியமும் பிறநாடுகளில் உள்ள வேலைப்பிரிவினையும் ஒன்றல்ல. வேலைப்பிரிவினையின் ஊடாக பெற்ற சிறப்புத் தேர்த்தில் இருந்து அமைகின்றதாகவும்இ அதிக சக்திகளை பெற்றுக் கொள்ள ஏதுவான பொருளாதார அமைப்பில் அமைந்திருக்கின்றது. ஆனால் இது பிறப்பின் அடிப்படையில்இ வர்ணாசிர (மனு) அடிப்படையில் பின்னிப்பிணைந்த சமூக அமைப்பும் ஒன்றல்ல.

சாதியம் என்பது நிலப்பிரபுத்துவத்தின் பின்னால் உருவான ஆதிக்கச் சிந்தனையாகும். ஆதிக்கச் சிந்தனையின் பின்னால் உள்ள பொருளாதார நலன்களும்இ தரப்படுத்தி மனிதரை கீழ்ப்படுத்தும் சிந்தனை என்பதையும் அவதானித்தில் கொள்ள வேண்டும். குறைவிருத்தி முதலாளித்துவப் பொருளாதார அமைப்பினுள் நுழைந்த போதிலும் மேற்கட்டுமானத்தில் எங்கிலும் சாதியம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையில் தமிழர்களிடையேயான சாதியக் கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகி வந்திருக்கின்றது. இது 50 வருடங்களுக்கு முன்னைய கடுமையான சமூக அமைப்பு என்பது இன்றில்லை. சாதியத்தைப் பாதுகாக்கும் பொருளாதாரக் கட்டமைப்பு சிதைந்துள்ள போதிலும் ஆதிக்க வர்க்கத்தின் சிந்தனையின் மறுவுற்பத்தி செய்கின்றதினால் பொருளாதார அமைப்பின் சிந்தனையான அரை நிலபிரபுத்துவ கலாச்சார விழுமியங்களையும் சமூகத்தில் தங்கிநிற்க வைக்கின்றது. சாதிஇ மத அரசியல் பாதையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கின்றதுடன் தரம் தாழ்ந்த கலாச்சாரத்தினையே மறுவுற்பத்தி செய்கின்றது. நிலவுகின்ற அரச இயந்திரத்தில் அரை நிலபிரபுத்துவச் சிந்தனையை தக்கவைக்கின்றது.

சமூகத் தளத்தில் சாதியம் தனிமனித சமூகமயப்படுத்தல்இ பொருளாதார அமைப்பு வாயிலாக தொடர்ந்து கொண்டிருக்கின்றுது. சமூகத்தில் உற்பத்தியான சாத்திர சம்பிரதாய கட்டமைப்பிற்குள் வாழும் சமூகத்தின் எதிர்காலம் துணையை அகமணத்திற்குள் அழுத்திவிடுகின்றது. குடும்ப அமைப்பு சாதியத்தினை தொடந்து வெவ்வேறு வடிவங்களில் உயிர் வாழவைக்கின்றது.

சாதியாதிக்கச் சிந்தனை என்பது மனித உயிர்களை மதிப்பி;ல்லாதவையாகவும்இ ஆதிக்கச் சாதிக்கு அடங்கி வாழ் என்ற சிந்தனையை போதிக்கும் சமயாசார வழிகளையும் ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும். சமயாசாரச் சிந்தனையை ஊடாக நியாயப்படுத்தும் சக்திகளை பார்க்கும் இடத்தில் அதிவுயர் பயன்பெறுமதியை சமூகத்தில் இருந்து பெறும் பொருட்டான பொருளாதாரக் காரணியை கொண்டதாக இருந்திருக்கின்றது.

உழைக்கும் வர்க்கமான ஒடுக்கப்படுகின்ற சாதிகளை அடக்கிவைப்பதன் ஊடாக உழைப்பை மலிந்த கூலிகளைக் கொண்டதாக இருக்கும்படி அவர்களை நிர்ப்பந்திக்கப்பட்டதுஇ நிர்ப்பந்திக்கின்றது. இந்த சமூக உற்பத்தியுடன் பிணைத்திருந்த நிலை இலங்கையில் உடைக்கப்பட்டுள்ளது. இன்று மக்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்காத நிலை இருப்பினும் தெரிவுச் சுதந்திரம் என்பது இன்று ஓரளவிற்கு உள்ளது. இவ்வாறு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு காரணம் அரசியல் பொருளாதாரக் காரணங்களாகும். எனவே இங்கு ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவு தொடர்ந்தும் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் சாதி மாத்திரம் அல்ல.

சாதியைச் சுற்றிய சமூக பொருளாதாரஇ சமய நிறுவனம் என்பது உடல்லுழைப்பை செலுத்தாது மற்றவர்களின் உழைப்பில் வாழும் சுரண்;டல்களால் தமது பொருளாதார நலனை ஏற்படுத்திக் கொள்ளும் நரித்தந்திரமாகவும் பார்க்கப்பட வேண்டும். சாதிய சம்பிரதாயத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராடுகின்ற போதும்இ சாதிய விதிகளை மீறுகின்ற போது கொடுக்கப்பட்ட தண்டனைகளை அறிவதன் ஊடாக மதகுரு குலத்தவர்களின் குரூர சிந்தனை வெளிப்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.
சாதியைப் பெருமையை நிலைநிறுத்திக் கொள்ளும் புனைவுகளை புராணக்கதைளுடன் தொடர்புபடுத்திய வரலாற்று நிகழ்வு என்பது விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்டதாக போராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவில் 1872 குடிசன மதிப்பு எடுத்த போது சூத்திரர் என்ற வரையறைக்குள் தம்மை அடக்கிவிட்டதால் சாதியைப் பற்றிய பல வெளியீடுகள் வெளிவந்தன. இலங்கையில் கரையார்இ திமிலர்இ முக்குவர்இ சீர்பாதகுலத்தோர் என்று தமது குலங்களின் பெருமையை குறிக்கும் புத்தகங்களும் வெளிவந்தன. இவற்றிற்கப்பால் மனித குல விடுதலையையே இலக்காகக் கொண்ட சாதியத்தைப் பற்றிய ஆய்வுகளும் மற்றும் வெளிநாட்டு மானிடவியலாளர்களின் வெளியீடுகளும் வெளிவந்து இருக்கின்றன.

இலங்கையில் சாதியமானது இந்திய கட்டமைப் போல இருக்கவில்லை. இந்தியாவில் இருப்பதைப் போன்ற பெரும் நிலத்துக்குச் சொந்தக்காரர்களான பெருமம் பண்ணையார்கள் இருந்தது இல்லை. ஆகக் கூடியது மண்முணையில் உள்ள 5000 ஏக்கரே ஒரு பெண்ணிடம் இருந்து உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் அரசகாணியக்கப்பட்டுள்ளது. இதனை விட தேயிலைஇ இரப்பர் தோட்டங்களே பெரும் எண்ணிக்கையான ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாக இருக்கின்றது. இவ்வாறு பெரும் ஏக்கர் கணக்கான நிலத்தைக் கொண்டிராத நிலத்தைக் கொண்ட உடமையாளர்களின் பொருளாதாரம் அதன் வளர்ச்சியின் பருமன் ஆய்விற்கு உட்பட்டதாகும்.
சோழர் இராட்சிய உருவாக்கத்திற்கான பொருள் உற்பத்திஇ அரசமைப்புமுறை என்பது போன்றவையும் பின்னர் தென்னிந்திய குடியேற்றம்இ கொலனித்துவகாலத்தின் காலத்தில் சமூக பொருளாதார நிலமைகளினால் கொலனித்துவ அதிகார வர்க்கத்திற்கு இசைவாக உள்;ர் அதிகாரவர்க்கம் உருவாகியிருக்கின்றது. இவ்வாறு உருவாகிய உள்ளூர் அதிகார வர்க்கம் பொருளாதார தகுதியில் மோதமுடியாத வேளையில் ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் ஒடுக்கப்பட்டார்கள். உயர்வர்க்கத்தவர்கள் தமது உயர் சாதியம் என்ற மேலாதிக்கச் சிந்தனையை வலியுறுத்தி தமது இருப்பை பாதுகாத்து வந்துள்ளதையும் கவனிக்கத்தக்கதாகும். இந்த வளர்ச்சிப் போக்கின் உச்சமாக ஆறுமுகநாவலரினால் முன்னெடுக்கப்பட்டதும்இ மேல் வர்க்கத்தின் கருத்தமைவான தமிழ்- சைவ – வேளாள உருவாக்கம் உச்சத்தை அடைந்தது.

வளர்ந்து வந்த பொருளாதாரமும்இ புதியவகை நிர்வாக அலகுகளும்இ புதிய சைவம் – தமிழ்- வேளாளவாக்கம் போன்ற சிந்தனைகளை ஆறுமுகநாவலர் மேற்கொண்டார். பழைய உற்பத்திக்கான சமூக உறவு சிதைவுக்களாகிய காலகட்டம். பழைய உற்பத்தி முறைஇ சமூக உறவு ஆகியவற்றை பாதுகாக்கும் நிலைப்பாட்டிற்கு சிங்களம் (தர்மபால) தமிழ் (ஆறுமுகநாவலர்) அடிப்படைவாதம் உள்ளாகின்றது. தமிழர்களைப் பொறுத்தவரை சைவம்- தமிழ்- வேளாளவாக்கம் ஆராயப்பட வேண்டும்.

கருத்தியல் மேலாதிக்கம் என்பது ஒரு சமூக ஒழுங்கை நிலைநிறுத்துவது என்பது சுயேட்சையானதொன்றல்ல. அது பொருளாதார ரீதியாக சுண்டுவதையும்இ சுரண்டும் பொருளாதார அமைப்பையும் பாதுகாப்பதும் தேவையாகின்றது. கொலனித்துவ ஆட்சிமுறை என்பது அதன் நிர்வாகத்தின் நோக்கில் சட்டங்களை இயற்ற வேண்டி நிலை உருவாகின்றது. கொலனித்துவ நாடுகளில் ஆட்சியாளர்கள் முழுமையாக தமது நாட்டுச் சட்டத்தினை பிரதியிட முடியவில்லை. இதன் காரணமாக உள்நாட்டு உயர்வர்க்கத்தின் உதவியும் ஆதரவும் பெற்றக் கொள்கின்றார்கள். முதலாளித்துவ அரசமைப்பின் ஆரம்பக் கட்டத்தில் உருவாக்கப்பட்டடிருந்த சட்டவாக்கம் என்பது உள்ளூர் சொத்துடமை வர்க்கத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன. இவர்களின் நலனையும் பாதுகாக்கும் பொருட்டான சட்;டங்களில் யாழ்தேசவழமைச் சட்டம்இ முக்குவ வழமை போன்றன ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தச் சட்டத்தின் ஊடாக சிறிய அலகுகைக் கொண்ட பொருள் உற்பத்தியை பாதுகாத்துக் கொண்டார்கள்.

உற்பத்தி சாதனங்களில் கடல்சார் உற்பத்திஇ மற்றும் உபரி உழைப்பையும்இ சிறுவுற்பத்தியைக் கொண்டு தம்வாழ்வை சுயாதீனமாக தொடர்ந்த மக்கள் பற்றிய தரவுகள்இ தேடல்கள்இ வரலாறுகள் என்பது சமூகத்தளத்தில் மறைக்கப்பட்டே வந்துள்ளது. இங்கு உற்பத்தி சாதனம் என்பது நிலம்இ இயந்திரங்கள் போலவே கடல் என்ற இயற்கையும் உற்பத்திச் சாதனம் தான். விவசாயம் சார்ந்த உற்பத்திக்கு அப்பால் பனைவளம் மிக்க ஒரு தேசத்தின் பொருளாதார அமைப்பும் அதுசார்ந்த மக்களின் வாழ்க்கை முறையாக பதிவு செய்யப்படவில்லை. நிலவுடமையாளர் விவசாயத்தின் ஊடாக நிகரலாபம் என்பது பெறாத முடியாத போதுஇ நட்டத்தினை உழைப்பினை இலவசமாக பெற்றுக் கொண்ட பொருளாதார அமைப்பின் ஊடாக தன்னை மேலான்மை கொண்டது.

ஆய்வுமுறையில் உள்ள பார்வைக்கோளாறுகள்

இந்த மேலான்மை கருத்தியல் கொண்ட சமூகமே தன்னை சுற்றியும் வரலாற்றை எழுதியுள்ளது. சமூக ஒழுங்கு ஆதிக்க வர்க்கதின் சமூக ஒழுங்காக பேணப்பட்டு வந்துள்ளது. தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தோட்டம் கொடுப்பவர்கள் யார்? இந்தியப் பத்திரிகை இந்துவில் பாடல்வேறு-ராகம் ஒன்றுதான் என்ற தலைப்பில் ‘மாமன்னர் மருது பாண்டியர்கள்இ வீரபாண்டிய கட்டபொம்மன்இ மாமன்னர் பூலித்தேவன்இ மாவீரன் சுந்தரலிங்கம்இ மாவீரன் வௌ;ளையத் தேவன்இ தீரன் சின்னமலைஇ மாவீரன் கோபால் நாயக்கர்இ ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த வீரநங்கை குயிலிஇ மாவீரன் ஊமத்துரை உள்ளிட்டவர்கள் அப்படித்தான் அழித்தொழிக்கப்பட்டனர்.’ http://tamil.thehindu.com/opinion/columns பாடல்பாடல் வேறு – ராகம் ஒன்றுதான்!
இவர்களில் குயிலியின் பெயரை மாத்திரம் எழுதுகின்ற போது சாதியை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இந்த (அடையாள அரசியல் ஊடாக வர்க்க ஆய்வை தவிர்த்த சாதியந்தன் புத்தி குலமந்தன் ஆசாரம் என்ற பொதுப்புத்தியில் அமைந்த ஆய்வு முறையாகும்) சமூகம் இருக்கின்றது. சாதியச் சிந்தனை மறுவுற்பத்தி செய்யும் இடமாக பொருளாதார அமைப்பும் அதுசார்ந்த நிறுவனங்கள்இ தொலைத்தொடர்புஇ கலாசாலையும் முக்கிய பாத்திரத்தினை வகிக்கின்றது. அனைத்து சமூகத்தளத்தில் உள்ளது போலவே கலாசாலை ஆய்வுமுறைஇ அது கற்பிக்கும் வரலாறு பற்றியும் ஒரு மாறுதலைக் கொண்டு வரவேண்டும்.

பொருளாதாரத்தின் சுண்டல் காரணமாகவும் உற்பத்திச் (நிலம்) சாதனத்தை தன்னகத்தே உரிமையாக கொள்ளாத காரணத்தினாலும் ஒடுக்கப்பட்டனர். உற்பத்திச் சாதனத்தை வைத்திருந்தவர்களிடம் அண்டியும்இ பிணைந்தும் வாழவேண்டிய சமூகம் இருந்திருக்கின்றது. உற்பத்திச் சாதனம் சொந்தமாக கொள்ளாத காரணத்தினாலும் அடங்கி வாழ் என்ற கருத்தியல் மேலாதிக்கமும்இ சமூக ஒழுங்கும் ஒடுக்கப்பட்டவர்களை அடக்கி வைத்திருக்கின்றது. உற்பத்திச் சாதனத்தையும்இ உழைப்பை சுரண்டிக் கொள்ளும் கருத்தியல் மறைப்பதற்கு கடவுளின் பெயரைச் சொல்லியும்இ பண்பாடுஇ மரபு என்றும் காரணம் கூறப்பட்டுள்ளது. இந்த கயமைத் தனம் பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த அழுகிய சமுதாய முறை மாற்றப்பட வேண்டும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net