ஜெர்மனி: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதே நல்லது

பிரிட்டன் வெளியே இருப்பதைவிட ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருந்து அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்துவது நன்றாக இருக்கும் என்று ஜெர்மனிய அரசத் தலைவி ஏங்கலா மெர்கல் அம்மையார் கூறியிருக்கிறார்.
160424212558_angela_merkel_640x360_epa
நேட்டோ பொதுச் செயலாளர் ஜன்ஸ் ஸ்டோலன்பெர்க்-வுடன் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதா வேண்டாமா என்பது பிட்டன் மக்களின் முடிவை பொறுத்ததே என்று அவர் கூறினார்.

ஆனால், தனியொரு சந்தையின் முழு பயன்களையும் பெறுவதற்கு லண்டன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று விதிமுறைகளை உருவாக்க உதவுவது தேவைப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய ராஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்தே இருக்குமென நம்புவதாக எப்போதும் அவர் கூறிவருவதையும் மெர்கல் அம்மையார் குறிப்பிட்டார்.
பிபிசி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net