துருக்கிய அதிகாரிகள் செயற்கையான நீர்மூழ்கி சுற்றுலா ஸ்தலமொன்றை உருவாக்கும் இலக்கில் அயிடின் மாகாணத்தில் குஸடாஸி நகருக்கு அண்மையிலுள்ள வாசஸ்தலமொன்றுக்கு அருகில் ஏஜியன் கடலின் ஆழத்தில் ஏ300 எயார்பஸ் விமானமொன்றை மூழ்கடித்துள்ளனர்.
177 அடி நீளமும் 144 அடி அகலமுடைய இந்த விமானம் கடல் அடித்தளத்திற்கு மூழ்குவதை பொழுதுபோக்காகக் கொண்ட சுற்றுலா பயணிகளை அந்த வாசஸ்தலத்திற்கு கவர்ந்திழுப்பதாக அமையும் என துருக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விமானம் கடல் நீருக்கு கீழான தாவரங்களையும் உயிரினங்களையும் காந்தமாக கவர்ந்திழுக்கும் என கூறப்படுகிறது.
இந்த 36 வருட கால பழைமையான விமானத்தை அயிடின் நகர சபை 270,000 துரக்கிய லிரா பணத்திற்கு தனியார் நிறு விமான நிறுவனமொன்றிடமிருந்து வாங்கியிருந்தது.