இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்..தந்தை

orlando-2
“இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்” என அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் தாக்குதலை நடத்தியவரின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தீவிரவாதிகளுடன் எவ்வித தொடர்பும் தன் மகனுக்கு இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஒர்லாண்டா நகரில் உள்ள பல்ஸ் என்ற பெயரிலான ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான விடுதியில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் இறந்தனர். 50க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் நடத்தியவர் அமெரிக்க காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் அவர் என்கிற விவரங்கள் தெரியவந்துள்ளன. அவர் பெயர் உமர் மதீன். அமெரிக்க குடியுரிமை பெற்ற ஆப்கான்கானிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்தவர்.

தீவிரவாதிகளின் தொடர்பிருக்குமா என்கிற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான மனநிலையே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் சொல்கின்றன.

அமெரிக்க வரலாற்றில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இதுதான் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய சம்பவம் என அமெரிக்க காவல் துறை தெரிவிக்கிறது.

Copyright © 4076 Mukadu · All rights reserved · designed by Speed IT net