மணிக்கு 300கி.மீ வேகத்தில் பறந்த கார்களை பறிமுதல் செய்த போலிஸார்

துபாயில், ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பொறுப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்ட எண்பதிற்கும் மேலான கார்களை துபாய் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
160612130827_dubai_cars_640x360_bbc_nocredit
போலிஸ் தலைமை அதிகாரி கமிஸ் அல் முசைநா, சில வாகன ஓட்டிகள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் வாகனங்களின் எண் பட்டைகளை வேண்டுமென்றெ நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

துபாய் போலிஸ் அதிகாரிகளின் வாகனங்களில் ஆடம்பர விளையாட்டு கார்களான லம்போகினி, போர்ஷே, மற்றும் ஆஸ்டன் மார்டின் ஆகியவையும் அடங்கும்.

இவைகளைப் பயன்படுத்தி போலிசார் சட்ட விரோதமாக பந்தயத்தில் ஈடுபட்டவர்களின் கார்களை துரத்திப் பிடித்தனர்.

துபாயில் சட்டவிரோதமாக பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு 27ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
bbc

Copyright © 7870 Mukadu · All rights reserved · designed by Speed IT net