ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கோரும் தரப்பிலிருந்து கன்சர்வேடிவ் தலைவர் விலகல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக மேற்கொள்ளப்படும் பரப்புரை வெறுப்பையும், வெளிநாட்டு துவேஷத்தையும் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னால் தலைவர் அந்தப் பிரசார முகாமிலிருந்து பரப்புரையிலிருந்து வெளியேறியுள்ளார்.

140805112431_sayeeda_warsi_512x288_getty_nocredit
ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவின் இடையிலான எல்லையில் அகதிகளும், குடியேறிகளும் வரிசையாக நிற்பதை காட்டுகின்ற, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கட்சியான யுகிப்பின் விளம்பரத்தை எடுத்துக்காட்டி சயீதா வார்சி இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார்.

பல பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அவைகளின் தொழிலாளர்களுக்கு வந்துள்ள கடிதத்தில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளன.

இது, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் மீண்டும் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.

பவுண்ட் மதிப்பு மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தை அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக பிரிட்டன் வாக்களிக்கலாம் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுவதை அடுத்து, ஐரோப்பிய பங்கு சந்தைகளும், டாலருக்கு நிகராக பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பும் வலுவாக அதிகரித்துள்ளன.

பவுண்டின் மதிப்பும், பங்கு சந்தையும் இரண்டுமே சுமார் இரண்டு சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வாக்களித்தால், ஸ்திரமற்ற சூழல் நிலவும் என பங்குச் சந்தைகள் அஞ்சுவதாக பிபிசியின் பொருளாதாரப் பிரிவின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பிபிசி

Copyright © 3766 Mukadu · All rights reserved · designed by Speed IT net