பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு.

FB_IMG_1468580191940
பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : 84 பேர் பலி,100 க்கும் மேற்பட்டோர் காயம்.பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 84 பேர் பலியானதுடன் 100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
FB_IMG_1468580198752
பிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நைஸ் நகரத்தில் இடம்பெற்ற பிரான்ஸின் தேசியதின நிகழ்வொன்றின் போதே இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொலிஸாருக்கும் ஆயுததாரிகளுக்குமிடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இரு ஹோட்டல்கள் மற்றும் உணவகமொன்றை ஆயுததாரிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவிக்கின்றனர்.
FB_IMG_1468580182459
லொறியொன்றில் வந்த ஆயுததாரிகள் சனநடமாட்டம் நிறை பகுதியில் குறித்த லொறியை மோதிவிட்டு, அதிலிருந்து இறங்கி தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வில் இடம்பெற்ற வானவேடிக்கையை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோதே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் சடலங்கள் வீதிகளில் வீசப்பட்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net