முகடு சஞ்சிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவும் பன்னிரெண்டாவது சிறப்பு இதழ் வெளியீடும் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது,அவ் நிகழ்வில் உரையாற்றிய பங்குபற்றிய சமூக போராளி அசோக் யோகன் கண்ணமுத்து முகடு குறிந்து தனது சமூகத்தளத்தில் கூறி இருப்பதாவது .
Ashok-yogan Kannamuthu
எமது போராட்டமும் , அதன் திசைவழியும் “அதிகார ஒத்தோடி பிழைப்புவாத சமூகம்” ஒன்றை இலங்கையிலும் , புகலிட நாடுகளிலும் தோற்றுவித்துள்ள இன்றைய சூழலில், இளம் தலைமுறை ஒன்று, “அதிகாரத்திற்கு எதிரான குரலோடு” , செயலூக்கம் கொள்ளுதல் என்பது, ஆச்சரியம் தருவதும் , எம்மை சந்தோசம் கொள்ள வைப்பதுமாகும்.
நேற்று ,இந்த இளம் தலைமுறை நண்பர்களின் குரலாய் வெளிவரும், ‘முகடு’ அரசியல் -கலை இலக்கிய சஞ்சிகையின் இரண்டாம் ஆண்டு நிறைவும் ,சிறப்பிதழ் வெளியீடும் பாரிசில் நடைபெற்றது.
இச் சஞ்சிகையின் உள்ளடக்கம் தொடர்பாக, என்னிடம் விமர்சனங்கள் உண்டு .
இவ் விமர்சனங்களை, எதிர்வினைகளை ஆரோக்கியமாக உள்வாங்கவும், உரையாடவும் களம் அமைக்கும் இந் நண்பர்கள், சரியான திசைவழி நோக்கி தம் பயணத்தை தொடர்வார்கள் என்ற நம்பிக்கை, என்னிடம் எழுகின்றது.
‘முகடு’ சஞ்சிகைக்கும், இதன் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களும் – நன்றிகளும்….!