பேரன்புக்கு உரியோரே
பெருமக்களே
உங்கள் அனைவருக்கும் வணக்கம் !
முகடு இதழின் பன்னிரன்டாவது வெளியீட்டு நிகழ்வரங்கில் பங்கெடுத்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி
இவ்வரங்கில் ஈழத்து கலை இலக்கியங்களை ஒருங்கிணைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தான தலைப்பே எனதுரைக்கான பேசு பொருளாக இருக்கின்றது.
அதற்கு முன்னராக, முகடு இதழ் தொடர்பில் ஒருசில வார்த்தைகள் குறித்து பேசி விட்டு கடக்கலாம் நினைக்கின்றேன்.
‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதே அறிவு’
இப்பொதுவெளியில் ஒவ்வொரு விடயங்களும் எவ்வாறு பொருள் கொள்ளப்படுகின்றது…..
எவ்வாறு மதிப்பிடப்படுகின்றது என்பது மிக முக்கியமானது.
உள்ளடக்கத்தில் மட்டும் முகடு மதிப்பிடப்படுவதாகவோ அல்லது பொருள் கொள்ளப்படுவதாகவோ நான் கருதவில்லை.
அதன் உருவாக்கத்தில் செயற்படுகின்ற அனைவரதும் செயற்பாட்டிலும் சேர்த்தே பொருள் கொள்ளப்படுகின்றது.
முகப்புத்தகத்தின் சுவர்களில் களமாடிகளாக இடப்படுகின்ற கோடுகளிலும் கோணல்களிலும் சேர்த்தே முகடு மதிப்பிடப்படுகின்றது என்பதனை, இத்தால் தோழர்களுக்கு அன்புரிமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இது முகடுக்கு மட்டுமல்ல…..பொதுவெளியில் ‘முகடு’ தெரிய சுவர் எழுப்பியிருக்கும் அனைவருக்கும் பொருந்தும் என்பதனையும பதிவு செய்து கொண்டு எனது தலைப்புக்கு செல்கின்றேன்.
ஈழத்து கலை இலக்கியங்களை ஒருங்கிணைப்பதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் ?
ஒருங்கிணைப்பு – நடைமுறைச்சிக்கல்கள்
இவற்றுக்குள் உள்ளும் புறமுமாக பல்வேறு விடயங்கள் உள்ளன.
துறை சார்ந்து கலை இலக்கியங்களை ஒருங்கிணைப்பது என்பதற்கு முன்னராக, இத்துறை எதிர்கொண்டு நிற்கின்ற சவால்கள் குறித்து பேச வேண்டியுள்ளது.
இதனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
————–
காட்டாறு வெள்ளம் போல் பெருக்கெடுத்து வரும் ஏகாதிபத்தியங்களின் உலகமயமாதல், எல்லாவற்றையும் ஒருகுடையின் கீழும், ஒற்றைத்தன்மையிலும் கொண்டுவருகின்ற போக்கினை நாம் காண்கின்றோம்.
எங்கள் வீட்டு முற்றம் வரை வந்து சேர்ந்துள்ள இக்காட்டாற்று வெள்ளத்துக்குள்ளேயே, எமது அலைந்துழல் வாழ்வு உள்ளது.
பொருளாதார வர்த்தக நலன்களை அடிப்படையாக கொண்ட இக்காட்டாறு வெள்ளம், நாம் கொண்டாடிக் கூடிமகிழந்த எங்கள் முற்றத்து கலை கலைச்சார பண்பாட்டு விழுமியங்களின் தனித்துவ இருப்பினை, கேள்விக்கு உட்படுத்துகின்றது.
ஒவ்வோர் இனத்தினதும் ஒவ்வோர் சமூகத்தினதும் தனித்துவமான அமைடயாளங்களை இல்லாது செய்து ஒற்றைப் பண்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற நிலை இது.
எல்லைகளைக் கடந்து பெருத்த விசப்பாம்பாக படமெடுத்து நிற்கும் இதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் ?
நன்கு திட்டமிட்ட வகையில் நவீனம் என்ற பெயரிலும் புதுமைகள் என்ற பெயரிலும், எங்கள் வீட்டு சாதாரன சடங்கு நிகழ்வுகள் வரை பொலிவுட் – பங்கரா – டிஜே என யாவும் வந்து சேர்ந்துள்ளது.
சடங்குகளோடு மட்டும் இது நிற்கவில்லை. அதற்கு அப்பாலும் மேடைகள் எங்கும் அலங்கோலமாக நிற்கின்றது.
ஈழத்தவர் கலை , ஈழத்து கலைஞர்கள் என்று சொன்னால் ஒரு தரம் ஏளனமா காண்பவர்கள், இதனை சர்வசாதரமாண ஏற்று கொண்டாடி மகிழ்கின்றனர்.
இவற்றையெல்லாம் எதிர்கொண்டு எமது தனித்துவமான கலைகளை அடுத்த தலைமுறையின் கைகளில் கொடுக்கின்ற முயற்சிகளும் இங்கு நடைபெற்று கொண்டுதான் உள்ளது.
குறிப்பாக மகிழ்பறையாக தமிழர் திருநாள் நிகழ்வில் முகிழ்ந்த தமிழிசை அடுத்த தலைமுறையின்
கைகளில் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நூற்றாண்டில் பெரும் வளர்ச்சி கண்டிருக்கும் தகவல் தொலைநுட்பத்தில், ஸ்மாட் பேசிகளில் ஓர் அங்கமாக உள்ள செல்பியினை, ஓர் ஆயுதமாக மாற்றி அதன் வழி ஓர் கலை வடிவத்தினை தம்பி பாஸ்கி கண்டு செய்வதனையும் நாம் காண்கின்றோம்.
சவால்களை எதிர்கொண்டு எமக்கான கலைகளை பாதுகாத்து அடுத்து தலைமுறையிடம் கொடுக்கின்ற முயற்சிகளும், நவீன நுட்பங்களில் புதிய கலைவடிவங்களை காணுதலும் நம்முன் நடந்து வருகின்றன.
இவைகள் சொற்ற அளவிலான முயற்சிகளே…
தனிநபர்களாக இதனை முன்னெடுத்துவிடமுடியாது.
இது ஒரு கூட்டுப்பொறுப்பு
இங்கிருக்கின்ற பொதுஅமைப்புக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு. கூட்டுப் பொறுப்பு !
—————
அடுத்து கலைஞர்கள் இலக்கியத்தரப்பை ஒருங்கிணைப்பதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் ?
நடைமுறைச்சிக்கல்கள் ஓரளவு புரிந்து கொண்டால் தான் ஒருங்கிணைப்பு பற்றி சிந்திக்க முடியும்.
இந்த நடைமுறைச்சிக்கல்கள் அகத்திலும் புறத்திலுமாக உள்ளது.
இங்கே இத்துறைகளில் ஈடுபடுவேர் எவரும் முழுநேர துறைசார்ந்தவர்கள் அல்ல.
அலைந்துழல்வு வாழ்வின் நிப்பந்தங்களை எதிர்கொண்டவாறு, தங்களுக்கு கிடைக்கின்ற நேரத்துக்குள்ளேயே யாவற்றையும் செய்ய வேண்டிய நிலை.
இந்த நிர்பந்தம் கலை இலக்கியத்துறையினருக்கு மட்டுமல்ல.
இங்கு, எல்லாத் தளங்களிலும் பகுதிநேரமாகவே பங்காற்ற வேண்டியவர்களாக உள்ளோம்.
மனித உரிமைச்ச செயற்பாடாகட்டும், அரசியற் செயற்பாடாகட்டும், ஊடக் செயற்பாடாகட்டும் எல்லாம் பகுதிநேரமாகவே செய்ய வேண்டிய நிலை.
இந்த நிலையில் நாம் யாரை எதிர்கொண்டு நிற்கின்றோமோ, அது முழுநேரமாக அதனைச் செய்கின்றது. எங்களை எதிர்கொள்கின்றது.
சிங்கள அரச பேரினவாதம் ,தனது கருத்தியலை முன்னிறுத்தும் கருத்தாளர்களுக்கு ஊதியம் கொடுத்து நியமித்துள்ளது. தனது அரச நலன்களை பேண முழுநேர இராஜதந்திரகளை வைத்துள்ளது.
தனது நலன்களை பாதுகாக்கவும், தன் மூலோபாயங்களை அடையவும் முழு நேரமாகச் செயற்படுகின்றது.
நாம் இதனை பகுதிநேரமாகவே எதிர்கொள்கின்றோம்.
ஓம்…
நாங்கள் பகுதிநேரவாதிகள் !
அந்த வகையில் ,இங்கு கலை இலக்கியச் செயற்பாடுகளும் பகுதிநேரமாகவே உள்ளது.
இவ்வாறு பகுதி நேரமாக செய்கின்றவர்கள் அனைவரையும் ஓரு தட்டில் வைத்து நாம் பாhத்து விடமுடியாது.
அவர்களுக்கு என்று தனித்து தனி அஜெண்டாக்கள் உண்டு.
இங்கே அஜெண்டாதன் பிரச்சனை !
குடிசார் மட்டத்தில் சதாரண சடங்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சமூக அசைவயண்டாவோ, ஊடகங்களுக்கான தெளிவான அஜெண்டாவோ இங்கு இல்லை.
இங்கு அஜெண்டா எனப்படுவது நாட்காட்டி, நாட்குறிப்போ அல்ல.
எமக்கான இலக்கினை அடைவதற்கான மூலோபாய தந்திரோபாயங்களுக்கு அமைவான எமது அஜெண்டா.
அவ்வாறு இக்கலைத்துறையில் தெளிவான நிலைப்பாட்டுடன் தங்களை அர்பணிப்புடனும் அதற்காக ஒப்படைக்கின்ன பரா அண்ணா போன்றவர்களின் எண்ணிக்சொற்சமே ஆகும்.
வெற்றி…விருது…பொன்னாடை…புகழ்….பேஸ்புக்கில் லைக் என்று ஓர் குறிப்பிட்ட வட்டத்துக்குள் தங்களை புதைத்துக் கொண்டவர்களை அதிகம் காணக்கூடியதாக உள்ளது.
சமீபத்திய காலங்களில் கலைத்துறையில் ஈடுபவேர் பலர் தங்களை ஓர் செலபற்றி மனநிலைக்குள் தங்களை வைத்துள்ளனர்.
செலபற்றி எனப்படுகின்ற ஓர் பண்பாடு கொலிவுட்டில் அதிகம் காணப்படும்.
செங்கம்பள விரிப்புக்களும், பெருத்தகார்களில் வந்திறங்குதலும் என்பது கொலிவுட் செலபற்றி பண்பாடு.
இந்த பண்பாட்டு மனநிலையில், தங்களை செலபற்றிகளாக கொண்டுள்ளவர்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றனர்.
முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவது எப்பது என்ற புத்தகம் போல், முப்பது நாட்களில் எப்படி ஸ்ரார் ஆகலாம், எப்படி செலபற்றி ஆகலாம் என்ற மயக்கங்களே இங்கு அதிகம்
காணப்படுகின்றது.
இது ஒருவகையில் சுயநோய் எனலாம். இது ஓருவகை சுயமயக்கம்.
ஏன்எனில் புகழ், பிரபலம் என்பது ஒருவிதி மயக்கநிலை ஆகும்.
இங்கு புகழுக்கும், பிரபலத்துக்கும் வித்தியாசம் தெரியாமல், இரண்டையும் ஒருதட்டில் வைத்துப் பார்த்தே ஓடுகின்றனர்.
கலை மக்களுக்கானது. மக்களிடத்தில் இருந்து புகழ் என்பது வந்து சேரும். பிரபலம் என்பது அவ்வாறனதல்ல.
கீழிருந்து மேலாக எழுவதே நிலைத்து நிற்கும்.
இது குறையல்ல குற்றச்சாட்டல்ல….;.
இதனை உணர்ந்து அதற்கு அப்பாலும் நதிபோல் ஓடுபவவேன நிலைத்தும் நிற்கின்றான்.
தேங்கு நீராய் நிற்பவன் நாற்றமெடுக்கின்றான்.
இதனை உணர்ந்து செயற்படுவர்களுக்கு அடிப்படையில் ஓர் தேடல் இருக்கும்.
அந்த தேடலே தனது பயணம் எதனை நோக்கியது என்பது பற்றிய தெளிவினை ஏற்படுத்தம்.
அந்த தெளிவு இல்லாதவர்களை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியமல்ல.
அவ்வாறு பண்பாட்டுத்தளத்தில் சாத்தியப்படுத்திய நிகழ்வாக இங்கு சிலம்பு அமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்ற தமிழர் திருநாள் நிகழ்வினை காணலாம்.
பண்பாட்டுத்தளத்தில் தெளிவான சிந்தனை உள்ள பொதுஅமைப்புக்கள் தனிநபர்கள் இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்து உள்ளார்கள்.
இது நம்முன் உள்ள ஓர் முன்மாதிரி
இவ்வாறு தெளிவான கொள்கை நிலைப்பாடு இலக்கு உள்ளவர்களை ஓரு புள்ளியில் ஒருங்கிணைப்பது சாத்தியம்.
சரி….இதனை சாத்தியப்படுத்துவதற்கான தெளிவும் கொள்கையும் எச்சிந்தனையில் இருந்து தொடங்குகின்றது.
எமது நோக்கு நிலையில் இருந்து தொடங்க வேண்டும்.
ஆனால் இங்கு நோக்கு நிலை என்பதே தெளிவற்று காணப்படுகின்றது.
ஜனாதிபதி பாரிஸ் சென்றார் என்று கொழும்பில் இருந்து எழுதப்பட்ட செய்தியினை அப்படியே கொப்பியெடுத்து ஒட்டிவிடுதல் இதற்கு ஒர் உதாரணமாக எடுக்கலாம்.
கொழும்பில் இருந்து பாரிஸ் செல்லுதல் என்பது சரி. அது கொழும்பினை தளமாக கொண்டு சிறிலங்காவின் நோக்கு நிலையில் இருந்து ஜனாதிபதி என செய்தியில் எழுதப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு பரிசில் இருந்து அதனை செய்தியாகும் போதும், பாரிசுக்கு சென்றார் என வராது. வந்தார் என்றே வரும்.
ஈழத்தமிழர் தளத்தின் நோக்கு நிலையில் ஜனபாதிபதி என செய்தி வருமா ?
ஆனால் இங்கு தமிழ் தேசிய ஊடகம் என்ற பெயரில் அவ்வாறே கொழும்பின் செய்திகள் கொப்பி எடுக்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றன.
எமக்கான தளம், எமக்கான நோக்கு நிலை என்பது தெளிவாக இருக்க வேண்டும்.
இத்தெளிவுதான எமது இலக்கினை அடைவதற்கான அஜெண்டாவை தரும்.
இதன் ஊடாக நாம் எதனை அறுவடை செய்யப் போகின்றோம்.
அதுதான் எமக்கான மென்சக்தி.
2009ம் ஆண்டுக்கு முன்னரான எமது வன்சக்தி நிலை, தற்போது இல்லை.
வலுச்சம நிலை என்பது போர்களத்துக்கு உரியது மட்டுமல்ல.
நாம் யார் எதிர்கொண்டு நிற்கின்றோமோ, அதனோடு நம் சமமாக நிற்க நமக்கு சக்தி வேண்டும்.
வலுச்சம நிலைக்கு, நமது மென்சக்தி வலுப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு மென்சக்தி என்பதனை வெறும் ஒன்றுகூடல்கள் ஊர்வலங்களோடு சுருக்கிப் காண வேண்டாம்.
எமது எல்லாத்துறை சார் வளங்களும் ஒருங்கிணைக்கபட்டு, அது வலுப்பெறும் போதே எமக்கான மென்சக்தி வலுப்பெறும்.
அவ்வகையில் கலை இலக்கியத்துறைகளும் இந்த மென்சக்தியில் ஒன்றே.
இதனைத் தெளிவாக புரிந்தால் எமது கலை இலக்கியங்களுக்கான இலக்கு பாதை தெளிவாகும்.
நன்றி
சுதன்ராஜ்