ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு
FB_IMG_1470510629999
குணா கவியழகன்

FB_IMG_1470510633377
எழுத்தாளர் ஜெயமோகன்

விகடன் தடம் இதழுக்கு அளித்த நேர்காணலில்“இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை” என தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் ‘நஞ்சுண்ட காடு’ நாவலின் ஆசிரியரான் குணா. கவியழகன், ஜெயமோகனுக்கு பகிரங்க விவாத அழைப்பை விடுத்திருக்கிறார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில்,

“எழுத்தாளர் திரு.ஜெயமோகன் விகடன் தடம் இதழின் பேட்டியில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லை என கூறியிருக்கிறார். இந்த கருத்துத் தொடர்பில் ஒரு பகிரங்க விவாதத்திற்கு திரு.ஜெயமோகனை அழைக்கிறேன். அரசறிவியல் கோட்பாட்டு அடிப்படையிலும் நடப்பிலுள்ள இனப்படுகொலை தொடர்பான சர்வதேசச் சட்ட நியமங்களின் அடிப்படையிலும் இந்த விவாதத்தை நிகழ்த்த முடியும் என துணிகிறேன். தான் கூறிய கருத்தில் இப்போதும் அவருக்கு துணிபிருந்தால், விடய அறிவிருந்தால், தன் கருத்தில் இந்த கணம் வரையிலும் ஆட்சேபணையற்றிருந்தால் , நெஞ்சில் மீதமாய் நேர்மை திறனிருந்தால் இந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net