இந்தக் கடலைக் கடந்தாக வேண்டும்
கொஞ்சம் வெட்கத்தைத் துற
இந்த வானை கிழித்தே ஆக வேண்டும்
கொஞ்சம் வெட்கத்தைத் துற
இந்த முத்தத்தை கொடுத்தே ஆக வேண்டும்
கொஞ்சம் வெட்கத்தைத் துற
உடல் பெறுவது
மொட்டவிழ்க்கும் வித்தை
உள்ளம் பெறுவது
மொட்டவிழும் வித்தை
எங்கே கொஞ்சம் வெட்கத்தைத் துற
எதை நான் துறப்பேன்
அச்சத்தை?
புனிதத்தை
முதலில் என் வெட்கத்தைத் துறப்பேன்
எதை நீ துறப்பாய் அன்பே?
ரகசியத்தை?
ராத்திரிகளை!
இருக்கட்டும் முதலில் வெட்கத்தைத் துற
மூக்கின் மேல் அமரும்
செங்கோவங்களை
மீசையில் அமர்ந்துறுத்தும்
அந்த வெட்கத்தைத் துற
இந்தக் காதலைக் கடந்தே ஆக வேண்டும்
வெட்கத்தைத் துற!
இந்த இச்சையைக் கடந்தே ஆக வேண்டும்
வெட்கத்தைத் துற.