ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியது பெரிய கௌரவம் – ரம்ப்

obama-trumb
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில சந்தித்துப் பேசியுள்ளார். ஒபாமாவைச் சந்திப்பதற்காக, டிரம்ப் தனது சொந்த விமானத்தில் நியூயார்க்கில் இருந்து வோஷிங்டனுக்கு மனைவி மெலானியாவுடன் சென்றுள்ளார்.

ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியது தனக்குக் கிடைத்த பெரிய கௌரவம் எனத் தெரிவித்த டிரம்ப் எதிர்காலத்தில், ஒபாமாவுடன் ஆலோசனை நடத்துவதை ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றரை மணி நேரம் இடம்பெற்றாலும் இன்னும் நீண்ட நேரம் நடந்திருக்கலாம் எனவும் பல சூழ்நிலைகளைப் பற்றி விவாதித்ததாகவும் சில அருமையானவை எனவும் சில கடினமானவை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஒபாமா, சிறப்பான, விரிவான பேச்சுவார்த்தை தனக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாகவும் , புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெற்றி பெறக்கூடிய வகையில், அதிகார மாற்றம் சுமுகமாக நடைபெறுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுதான் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தனது முக்கியப் பணி என்று தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் பிரச்சினைகள் குறித்து ஆலோசித்ததாகவும், தனது குழுவுடன் இணைந்து அமெரி்க்கா சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து செயல்பட டிரம்ப் ஆர்வமுடன் இருப்பது குறித்து தான் ஊக்கமடைந்திருப்பதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net