எங்கட படம்.
_________________
300இருக்கைகள் கொண்ட அரங்கில் இருக்க இடமில்லாமல் நின்றும் நிலத்தில் இருந்தும் பார்த்த பார்வையாளர்களின் பாராட்டோடு 15:00 மணிக்கு தொடங்கி 13-11-2016 18:00 மணியளவில் நிறைவுபெற்றது. பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஈழத்தமிழ் திரைப்பட சங்கத்தினரால் திரையிடப்பட்ட எங்கட படம்.”கடைசித்தரிப்பிடம்”
இத்திரை மொழி
ஈழத்து தமிழ் புலம்பெயர் நவீன அடிமைகளின் கதைக்கருவை களமாகக்கொண்டு, ஒரு பெண்பாத்திரத்தை முதன்மைப்படுத்தி அவரை சூழ நடக்கும் சம்பவங்களை காட்சிப்படுத்தி விரிகின்றது
நிலானி,கடைசி தரிப்பிடத்தில் பயணிக்கும் பிரதான பாத்திரம். அவள் மாணவ வதிவிட அனுமதியுடன் நாட்டில் இருந்து லண்டன் மாநகருக்கு படிக்க வருகின்றாள்.அவளை லண்டனுக்கு அனுப்பிய முகவரின் ஏமாற்றால் அவளுக்கு அவள் படிக்க வந்த கல்லூரி வதிவிட அனுமதி புதிப்பிக்கவில்லை,அவளுக்கு இரண்டு சூழ்நிலை உருவாகின்றது,நாட்டிற்கு திரும்பவேண்டும் அல்லது,வேறு ஒரு கல்லூரியைத் தெரிவு செய்து அதனூடாக வதிவிட அனுமதியை புதிப்பிக்கவேண்டும்,நிலானி வேறுகல்லூரியூடாக விசா புதுப்பிப்பதற்காக முற்படுகின்றார்.அதற்கான சந்தர்ப்பமும் கை நழுவுகின்றது. இந்த நிலையில் நிலானியை தங்கவைத்திருந்த நிலானியின் மாமன் மகளும் அவரின் கணவரின் நிர்ப்பந்தத்தால் நிலானியை வீட்டைவிட்டு வெளியேறச்சொல்கின்றார்.இவ்வாரான சூழலில் புலம்பெயர் வாழ்வின் வலிகளோடு கதைநகர்கின்றது, இறுதிவரை நிலானியுடன் தொலைபேசியில் உரையாடும் அப்பா இறுதியில் இறக்கின்றார்.
நிலானியின் பாத்திரத்தோடு துணைக்கு எடுத்துக்கொண்டு வந்த ஆண்பாத்திரங்களான
அன்ரன்-:நிலானியை ஊரில்இருந்தே நன்கு தெரிந்தவர் நிலானி அன்ரனை அண்ணை என்று அழைக்கின்றார் அன்ரனும் நிலானியை தங்கை என்று அழைக்கின்றார்
செல்வம்-:நிலானிக்கு பலநிறுவனங்களை வைத்திருக்கும் வர்த்தகராக அறிமுகமாகின்றார்,நிலானிக்கு வேலை தருவதாகவும் நம்பிக்கையூட்டுகின்றார்
கிங்கொங் வரதன் -:நாளாந்தம் வீதியால் நடந்துசெல்லும் நிலானியை காதலிப்பதாகச்சொல்லி இடைஞ்சல் கொடுக்கும் ஒரு இளைஞனாக வருகிறார்,
நிலானியின் அக்காவின் கணவர்…
நிலானியோடு பழகும் அனைத்து ஆண் பாத்திரங்களும் பெண்ணுடலுக்குள் ஒரு மனதிருக்கின்றது என்பதை மறந்து அவரவர் தேவைக்கேற்றால்போல் அவளைப் பயன் படுத்தவே முற்படுகிறார்கள்.அதுவும் தனித்த ஒரு இளம் பெண் என்றால் சமூகத்தின் பார்வை எப்படியிருக்கும் என்று நீங்கள் சந்தித்த சம்பவங்களை நினைத்துப்பாருங்கள்,அதை திரை மொழிபேசி யாதார்த்தத்தை சற்றும் பிசிராமல் சொல்லியிருக்கின்றார் என்றால் மிகையல்ல.
கதையாடல் ஈழத்தமிழர்களின் மொழிவழக்கை உள்வாங்கி பிரதிபலிக்கின்றது, ஆனால் நிலானி என்ற பாத்திரத்தின் பேச்சு அவரின் பாத்திரத்தை உள்வாங்கவில்லை. ஆனாலும் புலம்பெயர்ந்த எம் இரண்டாம் தலைமுறை பேச்சின் உச்சரிப்பில் இருந்தது கதை சொல்லி இதை அவதானித்திருக்கவேண்டும்.கவனித்திருந்தால் கதையை ஒருபடி உயர்த்தியிருக்கும்.
ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் கடைசித்தரிப்பிடத்தை கதையின் போக்குக்கேற்ப காட்சிகளை செழுமையாக்கி கைபிடித்துக்கொண்டு செல்கின்றவிதம் ஈழத்துசினிமாவின் இருப்பின் உயரத்தை பிரதிபலிக்கின்றது
பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்கள்,பாத்திரங்களை உள்வாங்கி
யதார்தமாகவே நடித்துள்ளார்கள்.
கடைசித்தரிப்பிடம் புலம்பெயர்ந்த எங்கள் வாழ்வியலை யதார்த்தம் குறையாமல் பிரதிபலிக்கின்றது.
இவ்வாரான காத்திரமான எங்கள் படங்களை பரிஸில் திரையிட்ட ஈழத்தமிழ் திரைப்பட சங்கத்தினருக்கு நன்றிகளும்.
இத்திரைப்படத்தில் பங்காற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கு என் பாரட்டுக்களும்.