Festival de Pongal – பொங்கல் விழா 2017 பிரான்சு.

Festival de Pongal – பொங்கல் விழா 2017 பிரான்சு
received_10210048131454373
புலம்பெயர் தமிழர் திருநாள் 2017- பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2048) பதினொராவது நிகழ்வரங்கம் [Fête de la Diaspora Tamoule 2017 France].
புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் தகவமைப்பை ‘தமிழால்’ நினைவில் நிறுத்தும் வகையில் பிரான்சில் தைப்பொங்கல் – தமிழர்க்கு ஒருநாள்! – தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்!! – ‘தமிழர் திருநாள்’எனவாகும் கருத்தியலில் தொடர்ந்த நிகழ்வரங்கை பிரான்சில் நிகழ்த்தி வருகிறோம்.
எதிர்வரும் “புலம்பெயர் தமிழர் திருநாள் 2017″ நிகழ்வு – பிரான்சில் நடக்கும் பத்தாவது ஆண்டு நிகழ்வாகும். இந்த நிகழ்வு இரு நாட்கள் நடைபெறும் முதல் நாளான 13சனவரி 2017 இல் பாரீசில் ஆய்வரங்கம் நிகழும். இதற்கு அடுத்தநாள் 14 சனவரி 2017 அன்று பொதுப் பொங்கலிடலுடனான சிறப்பு ‘தமிழர் திருநாள்’ பொது நிகழ்வரங்கம் நடைபெறும்.
புலம்பெயர் தமிழர் திருநாள் – 2017′ பிரான்சில் பதினொராவது நிகழ்வரங்காகிறது. இம்முறை பாரீசு நகரின் மையத்தில் அமைந்த பாரீசு – 20 நகரசபை முன்றலில் நடைபெறுவதானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக தடமிடுகிறது. தமிழர்களது புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் தமிழர் பண்பாட்டு நிகழ்வு இங்கு நடப்பதானது பாரீசு நகரின் பன்மைத்துவ அடையாள அங்கீகாரமாகவே கொள்ளல் பொருத்தமாகும்.
Mairie de Paris – 20ème arrondissement, 6 Place Gambetta, 75020 Paris Cedex 20
(Arrêt: Gambetta – Métro 3)
*Le 13.01.2017 * 15.30 – 18.30 * et *Le 14.01.2017 * 10h30 – 18h30*
இந்த நிகழ்வரங்கம் சாதி -மத -பிரதேச -தேச -வர்க்க பேதங்களற்ற வகையில் தமிழால் ஒன்றிணையும் சாத்தியத்தை பதினொராவது தடவையாக நிகழ்த்தவுள்ளது. சிறப்பான செயற்திட்டங்களுடன் முன்னெடுக்கப்படும் எமது இத்தகைய முயற்சி ஊடகங்கள் வாயிலாகவே வெகுமக்கள் தளத்தில் பரவலாகி அதனோடு இயைந்த பயணத்தில் விரிவாக முடியும். இத்தகைய வழிகளாலேயே தமிழுக்கான – தமிழர் திருவிழாவாக – புலம்பெயர் தமிழர் திருநாள் உலகெங்கிலும் விரவியவர்களாக வாழத் தலைப்பட்டுள்ள எமது சந்ததியினர் ஒன்றுகூடல் நிகழ்வாகி ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ எனவாக நிமிரட்டும்!.
அனைவரும் வருக! – Nous vous invitons à participer! – Entrée gratuite!

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net