மதி சுதாவின் “உம்மாண்டி” திரைப்படம் திரையில்


அனைவரும் ஆவலோடு காத்திருந்த உம்மாண்டி திரைப்படம் வெளியீட்டு திகதி இன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேடுகள் கடக்கும் போது தான் வேகமாய் பயணிக்க முடியும் என்பார்கள். இத்தனை தடைகளாக வருடங்களைத் தின்ற படைப்பிது ஆனால் கைவசம் இருக்கும் இந்த 17 நாளுக்குள் என்ன நடக்குமோ தெரியாது என்றாலும் இனி இந்தப் படத்திற்கு நான் தேவையில்லை என மதிசுதா கூறினார்

எதிர்வரும் 28, 29 ம் திகதிகளில் (28,29/10/2017) ராஜா 2 திரையரங்கில் 5.1 ஒலித்தரத்துடன் வெளியிடப்பட இருக்கின்றது.
சனிக்கிழமை (28.10.2017) பிற்பகல் 3 மணிக்கு ஒரு காட்சியும்
ஞாயிற்றுக் கிழமை (29.10.2017) பிற்பகல் 2:30 , 4:30, 6:30 காட்சிகளும் திரையிடப்படுகின்றது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே திரையரங்கு வாடகைக்கு பெறப்பட்டதால் அந் நேரத்தை தவற விடாதீர்கள்.

இதை உங்கள் படைப்பாக நினைத்து பகிர்ந்து உதவி எங்கள் சினிமாவுக்கான ஒரு அத்திவாரமிடலுக்கு உதவுமாறு சக கலைஞர்களையும் ஈழசினிமா ஆதரவாளர்களையும் படக்குழுவோடு சேர்ந்து வேண்டி நிற்கிறேன் என இயக்குனர் நடிகர் மதிசுதா தெரிவித்தார்.

Copyright © 5400 Mukadu · All rights reserved · designed by Speed IT net