இணையத்தில் வைரலாகும் ‘2.0’ படத்தின் மேக்கிங் வீடியோ!
‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியுள்ள ‘2.0’ படத்தின் 4ஆவது மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகின்றது.
சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிப்பதுடன் அவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார் படத்தின் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டீசர் கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி வெளியாகி ரசிகர்கர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் 4ஆவது மேக்கிங் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் மேலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக இயக்குனர் சங்கர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.