ஈரானின் பழுதடைந்த சட்டவிரோத மதுபானத்தால் 42 பேர் பலி!

ஈரானின் பழுதடைந்த சட்டவிரோத மதுபானத்தால் 42 பேர் பலி!

ஈரானில் அசுத்தமான சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதன் காரணமாக குறைந்தது 42 பேர் உயிரிழந்ததாக ஈரான் அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் இராஜ் ஹரிர்சியின் தகவல்படி, 16 பேர் பார்வைத் திறனை இழந்ததாகவும், 170 பேர் டையலிஸிஸ் சிகிச்சை பெறுகின்றனர்.

கடந்த மூன்று வாரங்களில், ஐந்து மாகாணங்களைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் உட்பட 460 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் மதுபாவனை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பரவலாக சட்டவிரோத மதுபான வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், எத்தனோலுக்கு பதிலாக சில நேரங்களில் மாசுபடுத்தப்பட்ட பானத்தில் நச்சுத் தன்மையுடைய மீதனோல் நிரப்பப்படுகிறது.

இந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுப்பட்டு வந்த சிலரை பொலிஸார் ஈரானின் தென் பிராந்திய நகரான பந்தர் அப்பாஸில் கைது செய்துள்ளனர்.

Copyright © 9318 Mukadu · All rights reserved · designed by Speed IT net