நிஜ வாழ்க்கையில் முதலமைச்சரானால் மக்களிடம் நடிக்க மாட்டேன்!

நிஜ வாழ்க்கையில் முதலமைச்சரானால் மக்களிடம் நடிக்க மாட்டேன்!

நான் நிஜ வாழ்க்கையில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். அவ்வாறு முதலமைச்சரானால் இலஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகளான கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு படம் தொடர்பாக விஜய் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘சர்கார்’ படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை.

இருப்பினும் நிஜ வாழ்க்கையில் முதலமைச்சரானால் மக்களிடம் நடிக்காமல் உண்மையான சேவையை வழங்குவேன் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் மாநிலமும் சிறந்த முன்னேற்றத்தை அடையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ‘மெர்சல்’ திரைப்படத்தில் ஓரளவு அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அரசியலில் மெர்சலை ஏற்படுத்தியுள்ளோம் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 0579 Mukadu · All rights reserved · designed by Speed IT net