அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 171.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றது.

மேலும், கடந்த ஆட்சிக்காலத்தில் குறிப்பாக ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் 1977- 1988 வரை 8 ரூபாயில் இருந்து 40 வரை சென்றது.

அதன் பின்னர் ரணசிங்க பிரேமதாச ஆட்சிக்காலத்தில் 40 இல் இருந்து 50 ரூபாயாக அதிகரித்தது. பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் 1994 ஆம் ஆண்டு முதல் 2005 வரையில் 105 ஆக டொலரின் பெறுமதி இருந்தது.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 130 ரூபாயாக அதன் பெறுமதி அதிகரித்தது, ஆனால் கடந்த 3 வருடங்களில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் 130 இல் இருந்து 171 ரூபாயாக அதிகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 4879 Mukadu · All rights reserved · designed by Speed IT net