கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முத்தமிழ் விழா இன்று கோலாகலமாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழர் கலை,கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கம் நோக்குடன் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
கிளிநாச்சி மகாவித்தியாலய மாணவர்கள் ஐநூறுக்கு மேற்பட்டவர்களின் நிகழ்வுகள் இன்று அரங்கை அலங்கரித்தமை குறிப்பிடதக்கதாகும்.
இக்று காலை 9 மணியளவில் மங்கல வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
தமிழர் பாரம்பரிய முறையிலான அழைப்பு நிறைவு பெற்றதும் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவ மாணவியரின் கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன.
மயிலாட்டம், கோலாட்டம், செம்பு நடனம், காவடியாட்டம், கும்மி, குறத்தி நடனம், விவசாயிகளின் பெருமை கூறும் நடனம், மீனவர் பாடல்கள், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் ஆண்டாண்டு காலமாக தமிழர் பாரம்பரியம் கூறும் கலைகள் இன்று மாணவர்களால் மீட்கப்பட்டது.
பாரம்பரிய கலை, கலாச்சார விழுமியங்களை மாணவர் மத்தியில் வேரூன்ற செய்யும் வகையில் அத்தனை கலை படைப்புக்களும் திறண்பட வெளிக்கொணரப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.