திரையுலகில் தனித்துவம் பிடிப்பேன்!

திரையுலகில் தனித்துவம் பிடிப்பேன்!

திரையுலகில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி கொள்ளவே விரும்புகிறேன், அடுத்தவர்களை பின்பற்ற விரும்பவில்லை என, நடிகை டாப்சி கூறியுள்ளார்.

ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த டாப்சி, தமிழ் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.

இந்நிலையில், அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்த டாப்சி கூறியுள்ளதாவது,

“சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன்.

பல வருடங்களுக்கு பின்னர் ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால், மற்றவர்களை பின்பற்றுவதை விட எனக்கென்று புதிய பாணி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

வீணாக மேக்கப் போடுவது அதற்காக நேரத்தை செலவிடுவது எனக்கு பிடிக்காது.

ஆடை அணிவதில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுப்பேன். எப்போதாவது சோர்வாக இருந்தால் ஷாப்பிங் செல்வேன்.

அது எனக்கு புதிய தெம்பை கொடுக்கும். சினிமாவுக்காக எதையும் செய்ய தயார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறேன்.

துப்பாக்கி சுடும் வீரர்கள் பற்றி அனுராக் காஷ்யப் எடுக்கும் உண்மை கதையில் நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படம். அந்த படத்துக்காக துப்பாக்கி சுட கற்று வருகிறேன்.

இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதற்கு நூறு சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும்.

நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும். எந்த காரணத்துக்காவும் டூப் நடிகையை வைத்து காட்சிகளை எடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்.

நானே எல்லா காட்சிகளிலும் நடிக்கிறேன். கதாபாத்திரமாக மாறி நடித்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net