தேர்தல் சட்டம் மற்றும் நடைமுறை தொடர்பில் விழிப்புணர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அச்சு ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் சட்டம் மற்றும் நடைமுறை தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது

இன்று (4) காலை 9.30 மணிமுதல் முல்லைத்தீவு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்வினை முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் கா காந்தீபன் அவர்கள் தலைமைதாங்கி விளக்கங்களை அளித்தார்

குறித்த செயலமர்வில் தேர்தல் காலங்களில் கண்காணிப்பாளர்களாக செயர்ப்படுபவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net