பொலிஸாரே பொலிஸ் அதிகாரியை கைது செய்த சம்பவம்!

பொலிஸாரே பொலிஸ் அதிகாரியை கைது செய்த சம்பவம்!

வீதியில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகக் கூறி தன்னால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுதலை செய்தமைக்கு எதிராக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தெபுவான சந்தியில் வைத்து தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொள்வதாக அச்சுறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மணல் அகழ்வு தொடர்பில் கைது செய்யப்பட்டவரிடம் சட்ட ரீதியான அனுமதிப்பத்திரம் இருந்ததால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதியில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதல் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net