மனைவியுடன் போன் கதைத்துக் கொண்டிருந்த நபரைக் கொலை செய்த கணவன்!
உலகில் எவ்வித குற்றவாளிகளும் தப்பித்துக்கொள்வதில்லை. அவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக எதைச்செய்தாலும் தற்போதைய உலகில் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகளால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். அதன்பிறகு, குற்றவாளிளை கண்டுபிடிப்பது கடினமான வேலை அல்ல.
இன்றைய சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்கள் இடம்பெறுகின்றன. இந்த குற்றங்களுக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் தங்களுக்கு இடையேயான தகராறுகள் மற்றும் சட்டவிரோத உறவுகள் என்பதை நாம் மறுக்கமுடியாது.
இவ்வாறான தொடர்பு காரணமாக கடந்த 19ம் திகதி நள்ளிரவில் நடந்த சம்பவம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
“கொஸ்வட்டிய தித்தவலபொத்த வீதியில் யாரே ஒருவரை கொலை செய்து போட்டுள்ளார்கள்” என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கொடவல அம்பிலிப்பிட்டிய வீதியில் இருந்து 11 கி.மீ. தொலைவில், கொஸ்வெட்டிய பிரதேசம் உள்ளது. அந்த இடத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் தித்தவலபொத்த வீதியில் இரத்தவெள்ளத்தில் நபரொருவர் கிடந்துள்ளார்.
பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தரவின் பெயரில் அவ்விடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இறந்த நபரை அடையாளம் காண பொலிஸார் கடுமையாக முயற்சி செய்தாலும், எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், வீதியின் அருகில் புல் மீது கிடந்த தொலைபேசியிலிருந்து அழைப்பொன்று வரும் சத்தம் அந்த இடத்தில் நின்ற ஓ.ஐ.சிக்கு கேட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், அழைப்பெடுத்த நபரை சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர்.
அதன் பிறகு குறித்த நபர்பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரியால் குற்றம் நடந்த இடத்திற்கு வரழைக்கப்பட்டார். அதன் பின்னர் கொல்லப்பட்ட நபர் தனஞ்சய என்று பொலிஸார் அறிந்து கொண்டனர்.
பின்னர் கொலை செய்யப்பட்டவரது மனைவி பற்றிய விபரங்கள் அறிந்துகொள்ளப்பட்டதுடன், மனைவி மற்றும் சிலர் சம்பவம் இடபெற்ற இடத்திற்கு வந்துள்ளனர்.
அதன்படி, படுகொலை செய்யப்பட்டவர் கொடஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான தனஞ்ஜய பண்டார என கண்டு பிடிக்கப்பட்டது.
இதற்கிடையே, எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையில், மரண பரிசோனைகள் நடைபெற்றன. அதிகமான இரத்தப்போக்கு காரணமாக தனஞ்ஜய உயிரிழந்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். முதலில் தனஞ்ஜயவின் வீட்டிற்கு சென்ற பொலிஸார்,
தனஞ்ஜயவுக்கும் அவரது மனைவிக்குமடையில் அடிக்கடி சண்டைகள் இடம்பெறுவதாக அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அறிந்து கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற சண்டையில் தனஞ்சயவின் மனைவியின் தந்தை வீட்டிற்கு வந்து தனஞ்ஜயவின் மனைவியையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் தனஞ்ஜயவின் மனைவியிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் அதைப் பற்றி எதுவும் தெரியாது என பதிலளித்துள்ளார்.
அதன் பின்னர் மேலும் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பல தகவல்கள் அறிந்து கொண்டனர்.
தனஞ்சயவின் தொலைபேசியை சோதனை செய்த பொலிஸார், அவர் 19ம் திகதி நள்ளிரவு நீண்டநேரமாக ஒரு இலக்கத்துடன் பேசியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் தனஞ்ஜயவிற்கு மற்றுமொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததை அறிந்து கொண்டபொலிஸார் அப்பெண்ணிடம் விசாரணைகள் மேற்கொண்டனர்.
குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது,
இந்த சம்பவத்தில் அவரது கணவரும் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
நான் ரஞ்சித் என்பரை காதலித்து திருமணம் செய்தேன். எனது கணவர் கஞ்சா குடிப்பவர். அதனால் எங்கள் இருவருக்கும் இடையில் தினமும் சண்டையாக இருந்தது.
இவ்வாறிருக்கையில் திடீரென்று கணவரின் கண்களில் பார்வை குறைபாடு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைக்குச் சென்றோம். எம்பிலிப்பிட்டிய- கொடகவெல பேருந்தில் சென்றோம். குறித்த பஸ்ஸில் தனஞ்சய நடத்துனராக இருந்தார்.
அதன்பின், இருவருக்கும் இடையில் நட்பு தொடர்ந்தது. தொலைபேசி பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதனை அறிந்து கொண்ட கணவன் தொடர்ந்து சந்தேகப்பட்டார். சித்திரவதைகளைச் செய்தார்.
அதன்பிறகு ரஞ்சன் மனைவியையும் அம்மாவையும் கொலை செய்வேன் உண்மையைச் சொல் என மிரட்டியதால். அவள் எல்லாவற்றையும் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க, ஒருநாள் தனஞ்சயவிடம் தொலைபேசியில் பேசுமாறு கணவன் என்னிடம் சொன்னார். அவற்றையெல்லாம் கணவன் போனில் பதிவு செய்திருந்தார்.
பின்னர் தனஞ்சயவுக்கு எதுவும் நேர்ந்துவிடுமென பயத்தில் இருந்தேன். ஏனெனில் கணவர் கத்தியை கூர்மையாக்கி கட்டிலின் கீழே வைத்திருந்ததை கண்டுகொண்டேன்.
இந்தநிலையில், விபத்தொன்றில் கணவரின் கை இரண்டும் உடைந்திருந்ததால் என்னிடம் கையுறை கேட்டார். நான் கடையில் சென்று வாங்கிக் கொடுத்தேன்.
19ம் திகதி தனஞ்சயவுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசுமாறும் குறித்த இடத்திற்கு வருமாறும் தெரிவிக்குமாறு கணவன் என்னிடம் கூறினார். நான் அவ்வாறு தொலைபேசியில் பேசி வரவழைத்தேன்.
தொடர்ந்து பேசிக்கொண்டிருக்குமாறு கணவர் கூறியபடி தொடர்ந்து பேசினேன். அப்போது ”அம்மா…” என்ற சத்தம் கேட்டது அதன்பின்னர் மீண்டும் தனஞ்சயவுக்கு அழைப்பெடுத்தபோது அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.
அன்றிரவு சுமார் 12 மணிக்கு கணவரும் எனது சகோதரரும் வீட்டுக்கு வந்தார்கள். என்னிடம் எதுவும் கேட்கக்கூடாது என்று கணவர் அப்போது என்னிடம் கூறினார்.
மறுநாள் தனஞ்சயவை கொலை செய்ததாகவும் தொலைபேசியை வீசி விடுமாறும் தெரிவித்தார். நான் அவ்வாறு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் குறித்த பெண்ணின் சகோதரரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்தனர். அதன் பின்னர் சந்தேக நபரான ரஞ்சித் என்பவரைக் கைது செய்து வாக்குமூலத்தைப் பொற்றுக்கொண்டனர்.
“நான் எம்பிலிபிட்டிய -இரத்தினபுரி பஸ்ஸில் நடத்துடனர் போல் வேலை செய்கிறேன். என் மனைவி கள்ளத்தொடர்புவைத்திருப்பதை அறிந்தேன். அதைப் பற்றி கேட்டேன். அவர் எல்லா விவரங்களையும் என்னிடம் கூறினார்.
இது இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது. மனைவியிடம் தெரிவித்தேன் குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து பேசுமாறு, அவர்கள் பேசியபோது மிகவும் கோபமடைந்தேன்.
19ம் திகதி தனஞ்சயனிடம் கதைத்து குறித்த இடத்திற்கு வருமாறு அழைக்கும்படி மனைவிடம் கூறினேன். அவரைக் கொலை செய்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கத்தியை கூராக்கி வைத்தேன்.
அவ்வாறு வரவழைத்து அவரைக்கொலை செய்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.