வடக்கு முதல்வருக்கு மாத்திரம் வாகனம் வழங்க முடியாது!
வடமாகாண சபை கலைக்கப்பட ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் வடக்கு முதலமைச்சருக்கு எதற்காக வாகனம், தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மட்டும் வாகனம் வழங்க முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை விவகார அமைச்சின் ஊடாக வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் 60 ஆயிரம் டொலர் பெறுமதியான வாகனம் ஒன்றினை மத்திய அரசாங்கத்திடம் கோரியிருந்த நிலையில் இறுதியாக கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அவரது கோரிக்கை கொண்டுவரப்பட்டிருந்தது.
எனினும் அவரது கோரிக்கையை அமைச்சரவையில் நிராகரித்து விட்டனர்.
இந்நிலையில் இது குறித்து இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டிருந்தார்.