அபாரமான கோல்களால் பார்சிலோனா அணியை உயர்த்திய மெஸ்ஸி!

அபாரமான கோல்களால் பார்சிலோனா அணியை உயர்த்திய மெஸ்ஸி!

ஐரோப்பாவின் உயர்தர கால்பந்து கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எடடியுள்ளது.

இதில் 11 முறை சம்பியன் அணியான ரியல் மெட்ரிட் அணி, ஐந்து முறை சம்பியனான பார்சிலோனா அணி, அட்லெடிகோ மெட்ரிட் அணி, ஜூவெண்டஸ், மென்செஸ்டர் யுனைடெட், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் என 32 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்தநிலையில், இங்கிலாந்தின் வெம்லே மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குழு B க்கான போட்டியில் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) தனது அபார கோல்களால் பாஸிலோனா அணியை உயரத்தினார்.

டொட்டன்ஹெம் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தை பாஸிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டமை ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது.

ஆர்ஜன்டீனாவின் மேஸ்ட்ரோ என்று வர்ணிக்கப்படும் மெஸ்ஸியின் (Messi) கட்டுப்படுத்த முடியாத இரண்டு கோல்களும், Philippe Coutinho, Ivan Rakitic ஆகியோரின் அபாரமான கோல்கள், ஆர்ஜன்டீனாவின் முன்னாள் கால்பந்தாட்ட விரர் மவுரிசியோ பொசென்டினோவின் (Mauricio Pochettino) டொட்டன்ஹெம் அணியை பின்னடைய செய்தது.

இந்த ஆட்டத்தை சுமார் 82,000 ரசிகர்கள் வரை கண்டு களித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, நேற்றைய வெற்றியின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பார்சிலோனா அணியின் பயிற்றுவிப்பாளர் Ernesto Valverde, இந்த போட்டியை அடுத்து தமக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

“ஒரு சில மோசமான பெறுபேறுகளுக்குப் பிறகு இன்று நன்றாக விளையாட முடிந்தது. எங்களின் எதிர் அணிக்கு எதிரான தாக்குதல் மிக சிறந்ததாக இருந்தது, எதிர் அணி எங்களுக்கு மிக நெருக்கடியை வழங்கிய போதும், நாங்கள் மிக வலுவாகவும், ஆர்வத்துடனும் விளையாடினோம்.

ஆட்டத்தின் முதல் பகுதி எளிதில் 0-3 அல்லது 1-2 என்ற புள்ளியை எட்டியது பின்னர் 2-3 என்ற வகையில் புள்ளிகள் உயர்ந்த போது டொட்டன்ஹெம் அணி எங்களுக்கு மிகவும் அழுத்தத்தை கொடுத்தது.

ஆனால் இது ஒரு சாம்பியன்ஸ் லீக் போட்டி என்பதால் இந்த புள்ளிகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

போட்டி மிகவும் பதட்டமானதாக இருந்தது. நாம் ஆட்டத்தின் மத்தியில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டோம்.

ஆனால் அவற்றை பின்னர் முகாமை செய்து தீர்த்துக் கொண்டோம்” – என்று தெரிவித்தார்.

பயிற்றுவிப்பாளர் வால்வர்டியின் கீழ் ஏற்கனவே பார்சிலோனா அணி, டொட்டன்ஹேம் அணியுடனான இரண்டு போட்டிகளை சமன் செய்த நிலையில், லா லிகா போட்டிகளின் போது மூன்றில் ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா அணி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0136 Mukadu · All rights reserved · designed by Speed IT net