பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்!

பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்!

பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ் குடும்பம் ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது.

பிரித்தானியா கொவன்றி பிரதேசத்தில் Radford பகுதியில் வாழும் நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார்.

Radford சாலையில் வசிக்கும் சின்னையா செந்தில்செல்வன் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் 300 வாழைக் கன்றுகளை பயிரிட்டுள்ளார்.

முதன்முதலாக ஜேர்மனியில் வாழ்ந்த சின்னையா, பச்சைவீட்டு வேளாண்மைக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் Coventry பகுதிக்கு சென்ற பிறகு, அவர் தனது பயிர்ச்செய்கை திறன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். வெப்பமண்டல தாவரங்களில் அவர் அக்கறை செலுத்தியுள்ளார்.

அதற்கமைய வாழை மரங்கள் மற்றும் பிற வெப்பமண்டல மலர்களை வளர்ப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார்.

அதற்கமைய கோடை காலமான ஒக்டோபரில் வாழை மரங்கள் வளர ஆரம்பித்துள்ளன.

சின்னையா செந்தில்செல்வனின் வாழை மரங்கள் தற்போது 3 மீற்றர் உயரமாக வளர்ந்துள்ளன.

அந்த வாழைமரங்கள் நன்கு வளர்ந்த போதிலும், இன்னமும் வாழைப்பொத்தி வெளிவர ஆரம்பிக்கவில்லை. எதிர்வரும் வருடம் பாரிய அறுவடை ஒன்று காத்திருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குளிர்கால நெருங்குகையில் அதனை சூடாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சின்னையா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எனது பெற்றோர்களின் தோட்டத்தில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் வாழை மரங்கள் இருந்தன, அதனை நாங்கள் விற்பனை செய்தோம்.

சிலர் இங்குள்ள எனது வீட்டிற்கு வருகிறார்கள், அவர்கள் இலங்கையில் தாம் இருப்பதனை போன்று உணர்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

பெரிய வாழையிலைகளை நான் கோவிலுக்கு வழங்குவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வாழைப்பழ செய்கையின் ஊடாக குறித்த பகுதியில் தான் மிகவும் பிரபல்யமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 3607 Mukadu · All rights reserved · designed by Speed IT net