இன்று இலங்கைக்கு வருகிறார் பிரித்தானியாவின் அமைச்சர்!

இன்று இலங்கைக்கு வருகிறார் பிரித்தானியாவின் அமைச்சர்!

ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானியாவின் அமைச்சர் மார்க் பீல்ட் இரண்டு நாள் விஜயமாக இன்று இலங்கை வருகிறார்.

அவர் இலங்கையில் இரண்டு நாட்களிலும் பல்வேறு தரப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

அவர், அமைச்சர்களான திலக் மாரப்பன, ரஞ்சித் மத்தும பண்டார, பைசர் முஸ்தபா, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பில் இயங்கும் பிரித்தானியாவின் வர்த்தக நிறுவனங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

ஏற்கனவே இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் பிரித்தானியா எதிர்பார்த்ததை விட தாமதமாக நகர்வதாக அவர் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்

அத்துடன் காலமாற்றம் சில விடயங்களுக்கு விடைதரும். ஆனால் அதுவே நல்லிணக்கத்துக்கும் தாமதத்தை ஏற்படுத்தும் என்று மார்க் பீல்ட் குறிப்பிட்டிருந்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net