கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது வேறுயாருமா?

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது வேறுயாருமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது வேறு யாருமா? என வட. மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சம்பந்தன் மௌனம் காப்பதனால் தனக்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பதில் தூதுவர் ரொபேட் ஹில்டன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்தார்.

இச்சந்திப்பு யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

இதன்போது வடக்கின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பின் பின், வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில், சம்பந்தரின் மௌனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்சியில் யார் தீர்மானங்கள் எடுப்பவராக இருக்கின்றாரோ அவரின் தீர்மானங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன.

தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் மௌனம் காப்பதனால், நன்மைகள் ஏற்படுமென்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

இதனிடையே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட நேரத்தில் தலைவர் சம்பந்தன் தானே உங்களுக்கு ஆதரவாக இருந்தார் என மீண்டும் ஊடகவியலாளார்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது பொது மக்கள் கொடுத்த அழுத்தங்களின் பின்னர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதனால், நடவடிக்கை எடுத்தார் என்று சுட்டிக் காட்டினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net