தென்கொரியாவின் முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை!
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியுங் பெக்கிற்கு நீதிமன்ற விசாரணைகளின் பின்னர், 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு, கையாடல், அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் மீது இன்று (வௌ்ளிக்கிழமை) சியோல் நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்றது.
இதன்படி அவருக்கு 13 பில்லியன் வொன் (11.5 மி.டொ ; 8.8 மி.பவுண்ஸ்) அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசியல் ரீதியான உந்துதல் காரணமாகவே தம்மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவில் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டு சிறையில் அடைக்கப்படும் நான்காவது முன்னாள் அரச தலைவர் இவராவார்.
அத்துடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரது ஆதரவாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்கொரிய பெண் அரசியல்வாதியான பாக் ஜியூன்-ஹை என்பவர், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் வற்புறுத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 33 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.