பதவியேற்க முன் பதவிகளை விட்டு விலகுவாரா?

பதவியேற்க முன் பதவிகளை விட்டு விலகுவாரா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர்- சுதந்திர கட்சியின் மூலம் பெற்றுக் கொண்ட அனைத்து பதவிகளையும் மஹிந்த ராஜபக்ஷ துறக்க வேண்டும் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறும் காலம் வந்துவிட்டது என்று மஹிந்தவால் கூறமுடியாது.

ஏனெனில் இந்த அரசாங்கத்தை மக்களே ஜனநாயக முறையில் தோற்றுவித்தனர். 2020 ஆம் ஆண்டு வரை இரு பிரதான கட்சிகளும் கூட்டிணைந்தே செயற்படும்.

ஒருவர் தான் விரும்பிய கட்சியில் இணைவதற்கும் அக்கட்சியில் இருந்து விலகுவதற்கும் பூரண சுதந்திரம் காணப்படுகின்றது.

இருப்பினும் கட்சியின் கொள்கைகளுக்கும், சட்டத்திட்டங்களுக்கும் உட்பட்டே அனைவரும் செயற்பட வேண்டும். இவ்விடயத்தில் மஹிந்த ஒரு விதிவிலக்கல்ல.

அனைவரும் குறிப்பிடுவது போன்று இவ்விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தீர்க்கமான முடிவுகளை கட்சி மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net