புலமைப்பரிசில் பரீட்சை : அனைத்து மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள்!

2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை : அனைத்து மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள்!

2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது அனைத்து மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, குருணாகல், கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கான சிங்கள மொழி மூலத்திற்கான வெட்டுப்புள்ளி 168 என்பதுடன், தமிழ் மொழி மூலத்திற்கான வெட்டுப்புள்ளி 165 ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 166 வெட்டுப்புள்ளியெனவும், மொனராகலை, பதுளை, அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம் போன்ற மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் 165 ஆகும் என தெரியவருகிறது.

நுவரெலியா மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 163 எனவும், யாழ். மற்றும் முல்லைத்தீவிற்கான வெட்டுப்புள்ளி 164 எனவும், கிளிநொச்சிக்கான வெட்டுப்புள்ளி 163 எனவும், மன்னார் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 162 எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள்…

மாவட்டங்கள் சிங்கள மொழி மூலம் தமிழ் மொழி மூலம்
கொழும்பு 168 165
கம்பஹா 168 165
களுத்துறை 168 165
கண்டி 168 165
மாத்தளை 168 165
நுவரெலியா 163 162
காலி 168 165
மாத்தறை 168 165
ஹம்பாந்தோட்டை 166 160
யாழ்ப்பாணம் 164
கிளிநொச்சி 163
மன்னார் 162
வவுனியா 158 164
முல்லைத்தீவு 158 164
மட்டக்களப்பு 164
அம்பாறை 164 163
திருகோணமலை 163 162
குருணாகல் 168 165
புத்தளம் 165 162
அநுராதபுரம் 165 162
பொலன்னறுவை 165 162
பதுளை 165 163
மொனராகலை 165 162
இரத்தினபுரி 166 162
காலி 168 165

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை  http://www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Copyright © 6344 Mukadu · All rights reserved · designed by Speed IT net