புலேந்திரன் என்ற பெயரைக் கேட்டாலே நடு நடுங்கிய சிங்கள ரௌடிகள்!
31ம்ஆண்டு நினைவு வணக்க நாள்-05.10.2018
லெப்கேணல் புலேந்திரன்.– 05.10.1987 // 05.10.2017
கந்தளாய் முதல் சிறிமா புரம்வரை..லெப்.கேணல் புலேந்திரன் என்ற பெயரைக் கேட்டாலே நடு நடுங்கிய சிங்கள ரௌடிகள்! போராட்ட காலத்தில்..நினைவில் இருந்து அழியாத சில நினைவுகள்!
எண்பதுகளில் 1987 அக்டோபருக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத் தளபதியாக இருந்து கோலோச்சிய மாபெரும் வீரச் சக்கரவர்த்திதான் லெப்.கேர்ணல் புலேந்திரன்..புலிகளின் பலத்தின் ஒரு பகுதிதான் புலேந்திரன் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.
எண்பதுகளில், திருகோணமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களில் பெரும்பாலானோர்,எழுபதுகளில் அறுபதுகளில் மாத்தறை,காலி அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இருந்து வந்த, சிங்கள ரௌடிக் கூட்டமும், அவர்களின் குடும்பங்களும்தான்.
திருகோணமலையில் நாலாம் கட்டையில் இருந்து ஸ்ரீமாபுரம் ,அனுராதபுரச் சந்திவரை திடீர் திடீர்,என்று தமிழர்கள் வாழ்ந்த பூமிகளை மேற்படி சிங்களக்காடையர் கூட்டம்தான் ஆக்கிரமித்தார்கள் என்பது மட்டுமன்றி,சிறு சிறு,மலைகளும் குன்று களுமாக இருந்த அப் பகுதிகளில் காடுவெட்டி,களிமண் சுவர் அமைத்த கொட்டில்கள் போட்டு, குடும்பம் குடும்பமாக எமது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
மறுபக்கம்,கந்தளாய்க் குளம் பகுதிகளைச் சுற்றி பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இவர்களால் விரட்டியடிக்கப் பட்டார்கள்.
கந்தளாயில் இருந்து தம்பலகாமம் வரை தமிழர் பூமியாக இருந்த எமது பாரம்பரிய மண், ,முஸ்லிம்களாலும், சிங்களவர்களாலும்,கொலனிகள்’ என்னும் பெயரில் ஆக்கிரமிக்கப் பட்டது.
எண்பதுகளின் நடுப்பகுதியில் புலேந்திரன் என்னும் ஓர் புலிப்புயல் இப் பகுதிகளில் கைத் துப்பாக்கியோடு நடைபயின்றது.
புலேந்திரன் இந்த காடையர் கூட்டத்தைக் கண்டால் உள்ளம் கொதித்தான்..
எமது மக்களை அழிக்க வந்த நாசகாரிகள் அவர்கள் என்று நினைத்தான்..
பலாத்காரமாக எமது மக்களின் நிலங்களைப் பறித்து,அவர்களை விரட்டியடித்து வாழும் அவர்களின் குடியிருப்புகள் மீது புலேந்திரனின் துப்பாக்கிகள்,வெடிக்கத் தொடங்கியபோது, இராணுவ க் கூட்டம் பயத்தினால் ஓடத் தொடங்கியது..
ஆயினும்..அப்படி ஓடியவர்களுக்கு வேட்டைத் துப்பாக்கிகளை,பாதுகாப்புக்காக, சிங்கள அரசு இலவசமாக வழங்கியதுடன் நிற்காமல்,அவர்கள் அப் பிரதேசங்களில் தொடர்ந்து பயமின்றி வாழ சில இராணுவ முகாம்களையும் அமைத்ததுடன்,அவர்களுக்கு இலவச உணவு,பராமரிப்பு தொகை போன்றவற்றையும் வழங்கி, நில அபகரிப்புக்கு துணை போனது!
ஆயினும், அப்பகுதிகளில் இருந்த சிறிய சிங்கள முகாம்கள் மீது அவ்வப்போது லெப்.கேர்ணல் புலேந்திரனின் படையினர் பாய்ந்து சென்று நள்ளிரவில் தாக்கி அழித்தனர்.
பாலம் போட்ட ஆறு என்னும் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து சென்ற சிங்கள இராணுவத்தினர்,புலிகளிடம்,புலேந்திரனிடம், அடிவாங்காமல், இறப்புகளை சந்திக்காமல் திரும்பிச் சென்ற வரலாறே அப்போது இல்லை எனலாம்!
அதுமட்டுமன்றி, ஊர்காவல் படை என்னும் பெயரில் வேட்டைத் துப்பாக்கிகளோடு வலம் வந்த சிங்கள காடையர்கள்மீதும் புலேந்திரனின் துப்பாக்கி குண்டுகள் அடிக்கடி பாயத் தொடங்கியது!
அதுமட்டுமன்றி, திருகோணமலை நகரப் பகுதிகளிலும், குறிப்பிட்ட சிங்கள ஏகாதிபத்திய இனவாதிகள் மீது புலிக் குண்டுகள் புயல் எனப் பாய்ந்து சென்று தாக்கின.
’கிரிமாத்தையா’ போன்ற எண்ணிறைந்த தமிழ் இன விரோதிகள்,புலேந்திரனின் புலிப் பாய்ச்சலைக் கண்டு நடு ,நடுங்கி மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களுக்கு ஓடிவிட்டனர்.
அடி..வெடி..உதவுவதுபோல்,அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்பதை, திருகோணமலைச் சிங்கள இனத் துவேசிகளுக்கு தன் வீரத்தால்,நிருபித்துக் காட்டிய ஒப்பற்ற மாவீரன்தான் லெப் கேர்ணல் புலேந்திரன்..
ஆகும்.புலேந்திரன் கைத் துப்பாக்கியோடு ஓர் சிங்களக் கிராமத்துக்குள் வருகிறான் என்று செய்தி போனதுமே, காடுகளில் ஓடி ஒழிந்தது இன அழிப்புக் கூட்டம்..!
அது புலிகளின் பொற் காலம்! அதை நிறுவிய பெரு வேங்கை, மாபெரும் வீரத் தளபதிதான் லெப். கேர்ணல் புலேந்திரன்..!
தமிழன் திருகோணமலை மாவட்டத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் ஒன்று, சுதந்திர தினத்துக்கு பின்னர் உண்டென்றால், அது லெப் கேர்ணல் புலேந்திரனின் காலத்தில்தான் என்று எதுவித தயக்கமும் இன்றி நான் சொல்வதில் வெட்கப் படமாட்டேன்!
ஆனால்,1987 அக்டோபரில், போர்நிறுத்த காலத்தில்,
இந்தியப் பெருங் கடலில் வைத்து புலெந்திரனையும் ,லெப்.கேர்ணல் குமரப்பா,போன்ற பதின் மூவரையும் , போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ,ஸ்ரீலங்கா அரசு கைது செய்து கொண்டு சென்றபோது,அச் சம்பவத்தில் வேறு வழியின்றி பலாலி இராணுவ முகாமில் சயனைட் உண்டு வீரச் சாவடைந்தவர்களுள் புலேந்திரனும் ஒருவர்.
சிங்கள இனத்தின்,சிங்கள அரசின் பரம விரோதியாக கருதப் பட்ட லெப்.கேர்ணல் புலேந்திரனை கொழும்பில் கொண்டு சென்று, நாலாம் மாடியில்,சிங்களப் புலனாய்வு அமைப்பு விசாரிக்க முனைந்தது,
புலேந்திரன் மீதுள்ள அப்பட்டமான ஓர் பழி வாங்கும் நடவடிக்கை ஆகும்.
அதைப் பார்த்துக் கொண்டு இருந்த இந்திய அமைதிப் படைக்கும் புலேந்திரனின் சாவில் நிச்சயம் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
திருகோணமலையை ஆட்சி புரிந்த ஓர் வீரப் பெருமலை சரிந்து விட்டது… என்று கேள்விப் பட்ட சிங்கள இனவாதிகள், திருகோணமலை மாவட்டம் எங்கும் பட்டாசு கொழுத்தி அந்த நாளைக் கொண்டாடினர் என்ற ஒரு செய்தி மட்டும் போதும், அந்த பெரு வீரனின் வீரத்தை உலகுக்கு-தமிழ் இனத்துக்கு பறை சாற்ற! என்
நினைவில் இருந்து எப்போதும் அழியாத நினைவுக் காவியம்தான் புலேந்திரன்!