ரஷ்யாவில் கோர விபத்து: 13 பேர் பலி!
ரஷ்யாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொஸ்கோவிலிருந்து 170 கிலோமீற்றர் தொலைவில் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
15 பயணிகளுடன் பயணித்த வான் ஒன்று, எதிரே வந்த பொதுப் போக்குவரத்து பேருந்துடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ரஷ்யாவின் திவெர் என்ற நகரத்திலிருந்து அருகிலுள்ள ஸ்டாரிஸ்டா நகருக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதில் வானில் பயணித்த 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, 19 வயதான ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகள் தொடர்பான அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் பேருந்தின் சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களும் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.