இலங்கையில் தொடர்ச்சியாக எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
கடந்த மே மாதத்தின் பின்னர் எரிபொருட்களின் விலைகள் நான்கு தடவைகள் அதிகரித்துள்ளன.
மே, ஜுலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இந்த விலைகளின் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 148 ரூபாவிலிருந்து 161 ரூபாவாகவும், 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 137 ரூபாவிலிருந்து 149 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 109 ரூபாவிலிருந்து 129 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 109 ரூபாவிலிருந்து 133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.