கால்நடை அபிவிருத்தி சபை தலைவருக்கு விளக்கமறியல்!
இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
6 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாக பெற்றுக்கொள்ள முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து வினாயகம் நேற்று(வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உயரதிகாரிகள் பலரும் இலஞ்சம் பெற்றுக்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.