நீரில் இழுத்து செல்லப்பட்டவர் பரிதாபமாக பலி!
மதுகம – வேத்தேவ பிரதேசத்தில், மதுகம கால்வாய் பாலத்தின் அருகாமையில் 42 வயதுடைய வேத்தேவ பிரதேசத்தினை சேர்ந்த நபரொருவர், நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேச மக்கள் அவரை காப்பாற்றி வேத்தேவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.