ஒரு வாரத்தின் பின்னர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஒரு வாரத்தின் பின்னர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் ‘பிக்பொஸ்’ ரித்விகா!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியின் பாகம் இரண்டில் வெற்றி பெற்ற ரித்விகா, தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் குறிப்பிடுகையில் ”நான் ‘பிக்பொஸ்’ வீட்டிற்குள் இருக்கும்போது நிறைய பேர் எனக்கு நிறைய ஆதரவு தந்தீங்க. நான் வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது.

ரித்விகா ஃபான்ஸ், ரித்விகா ஆர்மி என நிறைய கணக்குகளை தொடங்கி எனக்கு ஆதரவு தெரிவிச்சிருக்கிறீங்க.

இந்த ஒரு வாரம் நான் ஓய்வு எடுத்துக் கொண்டேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.

அதனால் தான் தாமதமாக இப்பதிவை வெளியிடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் முடிந்தது.

இதில் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் அனைத்து போட்டிகளையும் கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினர்.

ஜனனிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து விஜயலட்சுமியும் போட்டியில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் ‘பிக்பொஸ்’ பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார்.

இந்நிலையில் ஒருவார இடைவேளைக்கு பிறகு ரித்விகா தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து குறித்த பதிவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net