தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்கஸ் முதலிடம்!

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்கஸ் முதலிடம்!

மோட்டோ ஜிபி பந்தயத்தின், தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ் , முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்.

அந்த வகையில் ஆண்டின் 15ஆவது சுற்றான தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று சாங் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 4,554 கிலோ மீற்றர்கள், பந்தய தூரத்தை நோக்கி, 27 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சீறிபாய்ந்தனர்.

இதில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், பந்தய தூரத்தை 39 நிமிடங்கள், 55.722 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு முதலிடத்திற்கான 25 புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, டுக்கார்டி அணியின் வீரரான ஆண்ட்ரியா டோவிசியாசோ, 0.115 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அவர் இதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து, யமஹா அணியின் வீரரான மாவரிக் வினாளிஸ், .270 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் சம்பியனான யமஹா அணியின் வாலண்டினோ ரோஸ்ஸி, 1.564 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து நான்காவது இடத்தை பிடித்தார். அத்தோடு, அதற்கான 13 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், 271 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

டுக்கார்டி அணியின் வீரரான, ஆண்ட்ரியா டோவிசியாசோ 194 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். யமஹா அணியின் வாலண்டினோ ரோஸ்ஸி 172 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

16ஆவது சுற்றான ஜப்பான் மோட்டர் சைக்கிள் ஜிபி, எதிர்வரும் 21ஆம் திகதி, டுவின் ரிங் மோடிகி ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net