பிரதமரின் காவலராக மாறிய சூர்யா?

பிரதமரின் காவலராக மாறிய சூர்யா?

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படமும் அதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத படம் உருவாகி வருகின்றன.

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துவருகின்றமை அறிந்ததே.

ஆனால் இப்படத்தில் அவர் பிரதமராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் பிரதமருக்கு காவலராக சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு சற்றுமுன்னர் இப்படத்தின் மோகன்லால் கெட்டப் குறித்த புகைப்படம் வெளிவந்துள்ளது. இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.

இப்படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சிராஜ் ஜானி, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0920 Mukadu · All rights reserved · designed by Speed IT net