புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்துக்கு தடை!

புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்துக்கு தடை!

புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்து மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அலஹகோன் தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக கலாஓயா பெருக்கெடுத்துள்ளதால் புத்தளம் எலுவன்குளம் பாலத்திற்கு மேலாக இரண்டு அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதாகவும் அவர் ௯றினார்.

இதனால் புத்தளம் – மன்னார் வீதி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து போக்குவரத்துக்களும் புத்தளம் எலுவன்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளம் – மன்னார் பாதையூடாக பயணிப்போர் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © 3149 Mukadu · All rights reserved · designed by Speed IT net