பிரான்சில் கைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள் – அச்சத்தில் மக்கள்!

பிரான்சில் கைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள் – அச்சத்தில் மக்கள்!

பிரான்சிலுள்ள கிராமம் ஒன்றில் கைகள் இன்றி குழந்தைகள் பிறக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Ain மாவட்டத்தில் இருக்கும் Bourg-en-Bresse பகுதிக்கு அருகில் உள்ள Druillat எனும் சிறிய கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

இந்த கிராமத்தில் கடந்த ஐந்து வருடங்களில் 7 குழந்தைகள் இது போல் கைகள் இன்றி பிறந்துள்ளன.

இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் அக்கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முதல் சம்பவம் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

இக்கிராமத்துக்கு அருகே 20 கிலோமீற்றர் தொலைவில் மின்சார அணு உலை இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற ரீதியிலும் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

கைகள் இல்லாமலும், சில குழந்தைகள் கண்கள் வீங்கி, கன்னங்கள் சுருங்கி விகாரமாகவும் பிறக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

Copyright © 9181 Mukadu · All rights reserved · designed by Speed IT net